மனிதகுலத்துக்கு அவமானச் சின்னங்கள்: ஸ்டாலின்

மனிதகுலத்துக்கு அவமானச் சின்னங்கள்: ஸ்டாலின்

2 mins read

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குறித்து ஆவேசம்

சென்னை: சட்­ட­ச­பை­யில் நேற்று கேள்வி நேரம் முடிந்­த­தும் எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி, "விருத்­தா­ச­லத்­தில் பள்­ளிச் சிறு­மிக்­குப் பாலி­யல் தொல்லை கொடுத்த அப்­பள்­ளி­யின் உரி­மை­யா­ள­ரான திமுக கவுன்­சி­லர்­மீது கடும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," என்று வலி­யு­றுத்­தி­னார்.

காங்­கி­ரஸ் கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ராதா­கி­ருஷ்­ண­னும் அதே கருத்தை முன்­வைத்­தார்.

அவர்­க­ளுக்­குப் பதி­ல­ளித்த முதல்­வர் ஸ்டா­லின், "விருத்­தா­ச­லத்­தில் உள்ள தனி­யார் மழ­லை­யர், தொடக்­கப்­பள்­ளி­யில் பயி­லும் ஆறு வய­துச் சிறுமி இம்­மா­தம் 11ஆம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்­டிற்­குச் சென்ற பின்­னர், வயிறு வலிப்­ப­தா­கப் பெற்­றோ­ரி­டம் தெரி­வித்­துள்­ளார்.

"அரு­கி­லுள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் பரி­சோ­தித்­த­போது, சிறுமி பாலி­யல் துன்­புறுத்­த­லுக்கு ஆளாக்­கப்­பட்­டதை மருத்­து­வர் கண்­ட­றிந்­தார்.

"சிறு­மி­யின் தாயார் அளித்த புகா­ரின் அடிப்­ப­டை­யில், பள்­ளி­யின் தாளா­ள­ரும் ஓய்­வு­பெற்ற ஆசி­ரி­ய­ரு­மான பக்­கி­ரி­சாமி என்­ப­வர் கைது செய்­யப்­பட்டு அவர்­மீது வழக்கு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

"சம்­ப­வம் தொடர்­பில் மேலும் விசா­ரணை மேற்­கொண்டு, பார­பட்­ச­மின்றி கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கும்­படி உத்­த­ர­விட்­டி­ருக்­கி­றேன்," என்று கூறி­னார்.

"பக்­கி­ரி­சா­மி­யின் திமுக அடிப்­படை உறுப்­பி­னர் நிலை ரத்து செய்­யப்­பட்டு, கட்­சி­யி­லி­ருந்து அவர் நிரந்­த­ர­மாக நீக்­கப்­பட்­டுள்­ளார்.

"இது­கு­றித்து மாவட்ட குழந்­தை­கள் நல அலு­வ­ல­ரும் விசா­ரணை மேற்­கொள்­கி­றார்," என்று திரு ஸ்டா­லின் கூறி­னார்.

"இந்த அர­சைப் பொறுத்­த­வரை, குற்­றச் செயல்­களில் ஈடு­ப­டு­வோர் குறிப்­பாக, பெண்­கள் மற்­றும் குழந்­தை­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­செ­யல்­களில் ஈடு­ப­டு­வோர் மனித குலத்­திற்கே அவ­மா­னச் சின்­னம் எனக் கரு­து­கி­றோம். எனவே இத்­த­கைய குற்­றச்­செ­யல்­களில் ஈடு­ப­டு­வோர் யாராக இருந்­தா­லும், விரை­வில் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என்று முதல்­வர் உறுதி அளித்தார்.