ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்திய அதிகாரிகள்

ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்திய அதிகாரிகள்

1 mins read
da345a9b-0a8e-4a31-ab8e-85b9dad1fef1
-

சென்னை: சென்னை கலங்­கரை விளக்­கம் முதல் பட்­டி­னப்­பாக்­கம் வரை­யி­லான வட்­டச் சாலையை மீன் கடை­களும் உண­வ­கங்­களும் ஆக்­கி­ர­மித்து உள்­ள­தால் அங்கு செல்­வோர் வாக­னங்­களை சாலை­களில் நிறுத்­து­கின்­ற­னர்.

இத­னால் போக்­கு­வ­ரத்து கடு­மை­யாக பாதிக்­கப்­ப­டு­வ­தா­கக் கூறி சென்னை உயர் நீதி­மன்­றம் தானாக முன்­வந்து பொது­நல வழக்கை நேற்று முன்­தி­னம் விசா­ர­ணைக்கு எடுத்­தது.

அதில், "பொதுச் சாலை­களை இவ்­வாறு ஆக்­கி­ர­மிப்­ப­தைப் பொறுத்­துக்­கொள்ள முடி­யாது. இவற்றை அகற்றி இம்­மா­தம் 18ஆம் தேதிக்­குள் அறிக்கை தாக்­கல் செய்ய வேண்­டும்," என்று மாநக­ராட்­சிக்கு நீதி­ப­தி­கள் உத்­த­ர­விட்­டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை இலக்கை எவ்வாறு எட்ட இயலும் என்றும் அவர்கள் வினா எழுப்பினர்.

உயர் நீதி­மன்ற உத்­த­ர­வைத் தொடர்ந்து சென்னை மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் நேற்று மெரினா கடற்­கரை வட்­டச் சாலை­யில் ஆக்­கி­ர­மிப்­பு­களை அகற்­றத் தொடங்­கி­னார்­கள்.

மீன் கடை­கள் அகற்­றப்­ப­டு­வதை அறிந்­த­தும் 100க்கு மேற்­பட்ட மீன­வர்­கள் அங்கு திரண்­ட­னர். கடை­க­ளை­யும் உண­வ­கங்­களை­யும் அகற்­று­வதை எதிர்த்து மாந­க­ராட்சி அதி­கா­ரி­க­ளு­டன் அவர்­கள் வாக்­கு­வா­தத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற உத்தரவைக் காட்டி காவல்­துறை உத­வி­யு­டன் பணி­கள் தொட­ரவே, பெரும்­பா­லான மீன­வர்­கள் கடை­களில் இருந்த தங்­கள் பொருள்­களை­யும் மீன்­க­ளை­யும் எடுத்­துச் சென்­ற­னர்.

அகற்­றப்­ப­டா­மல் இருந்த பொருள்­களை அதி­கா­ரி­கள் அப்புறப்படுத்தினர்.