சென்னை: தாம்பரம் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், 15 ஊராட்சிகளுக்கும் சேர்த்து முழுமையான பாதாளச் சாக்கடை வசதி ஏற்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
"தாம்பரம் மாநகராட்சியில் பல்லாவரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் ரூ.211.15 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன," என்று அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் நிறைவடையும் என்றார் அவர்.
நகரங்களில் உள்ள நீர்நிலைகளை குடி நீருக்கு உகந்தவையாக மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நகரின் அனைத்துப் பகுதிகளிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தவும் சென்னை குடிநீர் வாரியம் மூலம் விரிவான திட்டஅறிக்கை தயாரிக்கப்படும் என்று அமைச்சர் நேரு கூறினார்.

