ஊரே கூடி கொண்டாடிய 110 வயதுப் பாட்டியின் பிறந்தநாள்

ஊரே கூடி கொண்டாடிய 110 வயதுப் பாட்டியின் பிறந்தநாள்

1 mins read
6df6c050-eaf7-4fec-94de-249d2650697d
-

முது­கு­ளத்­தூர்: ராம­நா­த­பு­ரம் மாவட்­டம் கமுதி அருகே உள்ள பேரை­யூர் கிரா­மத்­தில் வசிக்­கி­றார் ராமாயி.

1913ஆம் ஆண்டு பிறந்த இவ­ருக்­குச் சிறு­வ­ய­தி­லேயே திரு­ம­ண­மாகி சில ஆண்­டு­களில் கண­வர் இறந்து விட்­டார். குழந்­தை­கள் யாரும் இல்லை.

சொந்தங்களுடன் வசித்தாலும் தானே சமைத்து உண்கிறார். கிரா­மத்­தில் சுளுக்கு, மூச்­சுப் பிடிப்பு, குழந்தைகளுக்கு ஏற்படும் 'மாந்தம்' போன்ற பிரச்­சி­னை­களை குணப்­படுத்து­வ­தில் ராமாயி கைதேர்ந்­த­வர்.

இவ்­வாறு சேவை செய்­யும் பாட்­டி­யின் பிறந்­த­நா­ளைக் கொண்­டாட கிராம இளை­யர்­கள், விளை­யாட்­டுக் கழ­கத்­தி­னர், ஊர் மக்­கள் ஆகி­யோர் முடிவு செய்­த­னர். அதன்­படி ராமாயி பாட்­டி­யின் 110வது பிறந்­த­நா­ளில் அவ­ருக்­குப் புத்­தா­டை­கள் வழங்கி, கேக் வெட்­டச் செய்­த­னர்.

ராமாயி 10 ஆண்­டு­க­ளுக்கு முன்பு வரை ஈஸ்­டர் தினத்­தில் ஊர் மக்­க­ளுக்­குப் பாயா­சம் செய்து இல­வ­ச­மாக வழங்­கு­வார். முதுமை கார­ண­மாக அதனை நிறுத்தி விட்­டார்.

எனவே அவ­ரது பிறந்­த­நாள் கொண்­டாட்­டத்­தின்­போது பாயா­சம் தயா­ரித்து மூதாட்­டி­யின் கையால் பொது­மக்­கள் அனை­வ­ருக்­கும் வழங்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.