உதயநிதி: தமிழக அரசின் தூதராக டோனி நியமனம்

உதயநிதி: தமிழக அரசின் தூதராக டோனி நியமனம்

1 mins read

சென்னை: விளை­யாட்­டுத் துறையை மேம்­ப­டுத்த தமி­ழக அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வருவதாக­வும் அவற்­றுள் ஒன்­றாக 'தமிழ்­நாடு சாம்­பி­யன்ஸ் அறக்­கட்­டளை' தொடங்­கப்­படும் என்­றும் அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

இந்த அறக்­கட்­ட­ளை­யின் தலை­வ­ராக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் இருப்­பார் என்­றும் விளம்­பரத் தூது­ராக கிரிக்­கெட் வீரர் எம்.எஸ்.டோனி நிய­மிக்கப்பட உள்­ளார் என்­றும் அவர் நிகழ்ச்சி ஒன்­றில் பேசும்­போது குறிப்­பிட்­டார்.

"புதிய அறக்­கட்­ட­ளைக்கு என தனி இலச்­சினை, தனிப்­பா­டல் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. பெரு­நி­று­வன, பொது­மக்­க­ளு­டன் இணைந்து சாம்­பி­யன்ஸ் அறக்­கட்­டளை தொடங்­கப்­படும் என்­றும் முதற்­கட்­ட­மாக மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது என்­றும் அமைச்­சர் உத­ய­நிதி மேலும் தெரி­வித்­தார்.