சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது மாநிலம் முழுவதும் 5,329 சில்லறை விற்பனை மதுக்கடைகள் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, 'டாஸ்மாக்' நிறுவனத்தில் மொத்தம் 24,318 பேர் பணியாற்றுவதாகத் தெரிவித்தார்.

