'நிலவில் இருந்தும் பார்க்கலாம்'

'நிலவில் இருந்தும் பார்க்கலாம்'

1 mins read

சென்னை: கால நிலை மாற்றங்­களை எதிர்­கொள்­ளும் வகை­யில் பசுமை தமிழ்­நாடு திட்­டத்­தின் கீழ் ஆயி­ரம் குறுங்­கா­டு­கள் உரு­வாக்­கப்­படும் என தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

தமிழ் மொழியைச் சிறப்பிக்­கும் வகை­யில் நில­வி­ல் இருந்து பார்த்­தா­லும் 'தமிழ்' என்ற வார்த்தை தெரி­யும் வகை­யில் நூறு ஏக்­கர் பரப்­ப­ள­வில் மாதிரி காடு உரு­வாக்­கும் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­படும் என சுற்­றுச்­சூ­ழல் அமைச்­சர் மெய்­ய­நா­தன் தெரி­வித்­தார். கால­நி­லைக்­கேற்ற வாழ்­வி­யல் முறை என்ற திட்­டம் ரூ.50 லட்­சம் செல­வில் செயல்­ப­டுத்­தப்­படும் என்­றார் அவர்.