பாக் நீரிணையை நீந்திக்கடந்த மாற்றுத் திறனாளிக்குப் பாராட்டு

பாக் நீரிணையை நீந்திக்கடந்த மாற்றுத் திறனாளிக்குப் பாராட்டு

1 mins read
dbe1d5a1-9a5c-4435-af46-1b385902904d
-

ராமே­சுவரம்: சென்­னை­யைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநி­வாஸ் பிறவியிலேயே கைகால்­க­ளின் செயல்­பாட்­டில் குறை­பா­டுள்ள, மன­வளர்ச்சி குன்­றிய மாற்­றுத்­திறனாளி­யா­வார்.

தனது அன்­றா­டத் தேவை­களைக்­கூட நிறை­வேற்­றிக்­கொள்ள இய­லாத தங்­கள் மகனுக்கு நான்கு வய­தி­லேயே நீச்சல் கற்­றுத் தந்­த­னர் ஸ்ரீரா­மின் பெற்­றோர்.

அதன் பிறகு பல்­வேறு நீச்­சல் போட்­டி­களில் கலந்­து­கொண்டு அவர் சாதிக்­கத் தொடங்­கி­னார்.

இந்­நி­லை­யில், தமி­ழ­கத்­தின் தனுஷ்­கோடி பகு­தி­யில் இருந்து இலங்­கை­யின் தலை­மன்­னார் வரை­யி­லான பாக் நீரிணை கடல் பரப்பை நீந்­திக் கடந்­துள்­ளார் ஸ்ரீராம். மொத்­தம் 32 கிலோ மீட்­டர் தூர­முள்ள அந்தக் கடற்­ப­கு­தியை நீந்­திக் கடந்த அவ­ருக்கு 20 மணி நேரம் தேவைப்­பட்­டது.

அவ­ரது இந்­தச் சாத­னையை ராமேசுவரம் காவல் துணை கண்காணிப்பாளர் உமா தேவி உட்பட பலர் பாராட்டி உள்­ள­னர்.