பாலியல் தொல்லை தந்ததாக பேராசிரியர் இருவர் கைது

பாலியல் தொல்லை தந்ததாக பேராசிரியர் இருவர் கைது

2 mins read
fd8c0dee-5c3b-4c8a-8611-07a31f3d7b28
-

மதுரை கல்லூரி மாணவி புகார்; கல்லூரி மாணவருக்கு வலைவீச்சு

மதுரை: கல்­லூரி மாண­விக்குப் பாலி­யல் தொல்லை கொடுத்த குற்­றச்­சாட்­டின் பேரில் மதுரை கல்­லூ­ரி­யைச் சேர்ந்த இரண்டு பேரா­சி­ரி­யர்­களைக் காவல்­துறை கைதுசெய்­தது. மேலும் அக்­கல்­லூ­ரி­யைச் சேர்ந்த மாண­வ­ருக்கு வலை­வீ­சப்­பட்­டுள்­ளது.

மதுரை மாவட்­டம் செக்­கா­னூ­ரணி பகு­தி­யில் இயங்கி வரும் தனி­யார் கல்­லூ­ரி­யில் ஊரக வளர்ச்­சித்­து­றை­யின் பேரா­சி­ரி­ய­ரா­கப் பணி­யாற்றி வரும் ஜெகன் கருப்­பையா என்­ப­வர் மீது அக்­கல்­லூ­ரி­யில் முத­லாம் ஆண்டு படித்து வரும் மாணவி புகார் அளித்­துள்­ளார்.

அம்­மா­ண­விக்கு இப்­போது 17 வய­தா­கிறது. அவ­ருக்கு உத­விப் பேரா­சி­ரி­யர் ஸ்டா­லின் என்­ப­வரும் பாலி­யல் தொல்லை கொடுத்­ததாகக் கூறப்படுகிறது.

மேலும், பேரா­சி­ரி­யர்­கள் இரு­வ­ருக்­கும் அக்­கல்­லூரி மாண­வர் கருப்­ப­சாமி என்­ப­வர் இந்த விவ­கா­ரத்­தில் உத­வி­க­ர­மாக இருந்த தாகச் சொல்லப்படுகிறது.­

இது குறித்து பாதிக்­கப்­பட்ட மாணவி கல்­லூரி நிர்­வா­கத்­தி­டம் புகார் அளித்­த­போ­தும் எந்­த­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இதை­ய­டுத்து அம்­மா­ணவி மதுரை மாவட்ட மக­ளிர் நீதி­மன்­றத்தை அணுகி தமது புகாரை நீதி­ப­தி­யி­டம் நேர­டி­யாக அளித்­தார்.

புகா­ரைப் பெற்ற நீதி­பதி, மதுரை மாவட்ட டிஐஜி பொன்னி தலை­மை­யில் விசா­ரணை நடத்த உத்­த­ர­விட்­ட­து­டன், அது குறித்த அறிக்­கை­யை­யும் நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்ய அறி­வு­றுத்­தி­னார்.

அதன் பின்­னர், மாண­வி­யின் புகா­ரின் பேரில் பாலி­யல் தொல்லை கொடுத்த இரு பேரா­சி­ரி­யர்­கள், கல்­லூரி மாண­வர் மீது வழக்­குப் பதிவு செய்த காவல்­துறை, தீவிர விசா­ரணை மேற்­கொண்­டது.

விசா­ர­ணை­யின் முடி­வில், நேற்று பேரா­சி­ரி­யர்­கள் இரு­வரும் கைது செய்­யப்­பட்­ட­னர். காவல்­துறை விசா­ரணை தொடங்­கி­ய­துமே, மாண­வர் கருப்­பசாமி தலை­ம­றை­வா­கி­விட்­டார். அவரைத் தேடி வரு­வ­தாகத் தெரி­வித்­துள்ள காவல்­து­றை­யி­னர், கைதான பேரா­சி­ரி­யர்­கள் இரு­வ­ரும் மற்ற மாண­வர்­க­ளுக்கு இது­போன்று பாலி­யல் தொல்லை கொடுத்­துள்­ள­னரா என்­றும் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.

இந்த விவ­கா­ரம் நீதி­மன்­றம் வரை சென்­றதை அடுத்து, மதுரை காவல்­துறை துரித நட­வடிக்கை மேற்­கொண்டு வரு­கிறது. தென்­மண்­டல காவல்­துறை தலை­வர் ஐஜி அஸ்ரா கார்க், டிஐஜி பொன்னி உள்­ளிட்ட அதி­கா­ரி­கள் அத்­த­னி­யார் கல்­லூ­ரிக்கு நேரில் சென்று விசா­ரணை நடத்­தி­யுள்­ள­னர்.

பாதிக்­கப்­பட்ட மாண­விக்கு 17 வய­து­தான் ஆகிறது என்­ப­தால், கைதான பேரா­சி­ரி­யர்­கள் இரு­வர் மீதும் போக்சோ சட்­டத்­தின்கீழ் வழக்­குப் பதி­வாகி உள்­ளது.

இதற்­கி­டையே, குற்­றம்­சாட்­டப்­பட்ட பேரா­சி­ரி­யர்­கள் மீது மேலும் சில மாண­வி­கள் மட்­டுமன்றி, உடன் பணி­யாற்­றும் பேரா­சி­ரி­யர்­கள் சிலர் புகார் அளித்­து இருப்­ப­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.