சேலம்: காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரசு கலைக் கல்லூரி யைச் சேர்ந்த பத்து மாணவர்கள் நேற்று முன் தினம் எடப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.
அவர்களில் நீச்சல் தெரி யாத நான்கு மாணவர்கள் குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கினர்.
மற்ற மாணவர்களால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

