விண்ணில் செலுத்தப்படுகிறது சிங்கப்பூர் செயற்கைக்கோள்: இஸ்ரோ தகவல்

விண்ணில் செலுத்தப்படுகிறது சிங்கப்பூர் செயற்கைக்கோள்: இஸ்ரோ தகவல்

1 mins read

சென்னை: சிங்­கப்­பூ­ருக்­குச் சொந்த­மான டெலி­யோஸ்-2 செயற்­கைக்கோள் எதிர்­வ­ரும் 22ஆம் தேதி­யன்று விண்­ணில் ஏவப்­படும் என இந்­திய விண்­வெளி ஆராய்ச்சி நிறு­வ­னம் (இஸ்ரோ)­ அறிவித்­துள்­ளது.

இது புவி கண்­கா­ணிப்­புக்­காக ஏவப்­படும் செயற்­கைக்­கோள் ஆகும். மேலும், பேரி­டர் கண்­காணிப்பு உட்­பட மேலும் பல்­வேறு பணி­க­ளுக்குப் பயன்­ப­டுத்தப்படும்.

பிஎஸ்­எல்வி சி-55 என்ற ராக்­கெட் மூலம் இந்­தச் செயற்­கைக்­கோள் ஏவப்­ப­டு­கிறது. இதற்­காக இஸ்­ரோ­வின் என்எஸ்­ஐ­எல் நிறு­வ­னம் சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­டன் புரிந்து­ணர்வு ஒப்­பந்­தம் செய்து கொண்­டுள்­ளது என்­றும் சிங்­கப்­பூர் செயற்­கைக்­கோள் ஸ்ரீஹ­ரி­கோட்­டா­வில் உள்ள முதல் ஏவு­தளத்­தில் இருந்து ஏவப்­படும் என்­றும் இறு­திக்­கட்ட பணி­கள் தற்­போது நடைபெற்று வருவதாக வும் ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது. ஏற்கெனவே டெலியோஸ்-1 செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது.