நூறு பேருக்கு நீர்நிலைப் பாதுகாவலர் விருது

நூறு பேருக்கு நீர்நிலைப் பாதுகாவலர் விருது

1 mins read

சென்னை: நீர்­நி­லை­களைச் சிறப்­பாக பாது­காக்­கின்ற, மேம்­ப­டுத்து­கின்ற நூறு பேருக்கு முதல்­வ­ரின் நீர்­நிலைப் பாது­கா­வ­லர் விருது வழங்­கப்­படும் என தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

மாநி­லத்­தில் உள்ள 38 மாவட்­டங்­களில் இருந்து விருது பெறு­வோர் தேர்வு செய்­யப்­ப­டு­வர் என்­றும் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் தலா ஒரு லட்­சம் ரூபாய் பரி­ச­ளிக்­கப்­படும் என்­றும் சட்­டப்­பே­ர­வை­யில் பேசும்போது சுற்­றுச்­சூ­ழல் அமைச்­சர் சிவ.வீ.மெய்­ய­நா­தன் தெரி­வித்­தார்.

ஒரு கோடி ரூபாய் செல­வில் இத்­திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட இருப்பதாகவும் அவர் கூறி­னார்.