சென்னை: உள்துறை அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் காவல் படையில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, இத்தேர்வு ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என கூறப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என அமைச்சர் உதயநிதி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆயுதப்படையில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 15 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, கனவுகளை நிறைவேற்ற மொழி தடையாக இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

