500ஐக் கடந்த கொரோனா

2 mins read

சென்னை: தமிழ்­நாட்­டில் கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 502 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறு­தி­யா­ன­தாக அதி­காரிகள் தெரி­வித்­த­னர். அந்த மாநி­லத்­தில் மொத்­தம் 3,048 பேர் தொற்­றுக்கு ஆளாகி இருப்­ப­தாக அதி­கா­ர­பூர்வ தக­வல்­கள் கூறின.

தமிழ்­நாட்­டில் கடந்த சில நாள்­க­ளா­கவே கொவிட்-19 தொற்று அதி­க­ரித்து வரு­கிறது.

அரசு மருத்­து­வ­மனை, இதர பொது இடங்­க­ளுக்குச் செல் வோர் முகக்கவ­சம் அணிய வேண்­டும் என்று மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அறி­வு­றுத்தி வரு­கிறது.

புதி­தாக கிருமி தொற்­றி­யோரில் ஆண்­கள் 254 பேர், பெண்­கள் 248 பேர்.

ஐக்­கிய அரபு சிற்­ற­ரசுகள், இலங்கை, மலே­சி­யா­வில் இருந்து வந்­தோரில் தலா இருவருக்கும் தாய்­லாந்து, பங்­ளா­தேஷ், பிரான்ஸ் ஆகிய நாடு­களில் இருந்து வந்த தலா ஒரு­வ­ருக்­கும் தொற்று பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­டது.

மாநி­லத்­தில் தொற்று அதி­கரித்து வரு­கிறது என்­றா­லும் சென்ற அலைக­ள் அளவுக்கு இப்­போது பாதிப்பு அவ்­வ­ள­வாக இல்லை என்று கூறப்படுகிறது.

ஆகை­யால் அனைத்து பொது இடங்­க­ளி­லும் முகக்­க­வ­ச­ம் கட்டா­யம் என்ற ஒரு முடிவை மாநில நிர்­வா­கம் இன்­ன­மும் எடுக்­க­வில்லை என்று நேற்று தக­வல்­கள் கூறின.

இருந்­தா­லும்­கூட ராணிப்­பேட்டை மாவட்­டத்­தில் பொது இடங்­களில் முகக்கவ­சம் கட்­டா­யம் அணிய வேண்­டும் என்று மாவட்ட ஆட்­சி­யர் அறி­வித்தார்.

தனி மனித இடை­வெளியைக் கடைப்­பி­டிக்க வேண்­டும்; கைகளைச் சுத்­த­மாக சோப்பு அல்­லது கிருமி நாசினி கொண்டு சுத்­தம் செய்ய வேண்­டும்;

காய்ச்­சல், உடல் சோர்வு, தலை­வலி, உடம்பு வலி, தொண்டை வலி, இரு­மல் போன்ற அறி­கு­றி­கள் தென்­பட்­டால் மருத்­து­வ­ரைப் பார்க்க வேண்­டும்; கொரோனா உறுதியானால் குண­ம­டை­யும் வரை தனி­மையில் இருக்க வேண்­டும் என்று அவர் வலி­யுறுத்தி உள்­ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்