செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் சாலையில் கடந்த 10 நாள்களாக பலரையும் துரத்திச்சென்று தாக்கி, துன்புறுத்தி வந்த ஆண் குரங்கு ஒன்று கடைசியில் அதிகாரிகளின் வலையில் சிக்கியது.
அந்தக் குரங்கு வாகனத்தில் செல்வோரை விரட்டி விரட்டி மிரட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது. (படம்)
வனத்துறையினர் அதைப் பிடித்து சிகிச்சைக்காக வண்டலூர் உயிரியல் பூங்காவில் வைத்து இருக்கிறார்கள்.
அந்தக் குரங்கு 15க்கும் மேற்பட்டோரைக் கடித்து இருக்கிறது என்றும் அது மிரட்டியதால் வழிப்போக்கர்கள் பலரும் இன்னமும் பீதியில் இருந்து மீளாமல் இருக்கிறார்கள் என்றும் சிலர் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன.

