200 அரிய தொன்மைப் பொருள்கள் கண்டெடுப்பு

200 அரிய தொன்மைப் பொருள்கள் கண்டெடுப்பு

1 mins read

சிவ­காசி: விரு­து­ந­கர் மாவட்­டம் சிவ­காசி அருகே விஜ­ய­க­ரி­சல் குளத்­தில் 2ஆம் கட்ட அகழ் ஆய்­வுப் பணிகள் இம்­மா­தம் 6ஆம் தேதி தொடங்­கின.

அதில் இது­வரை தொன்­மை­யான 200 பொருள்கள் கண்­டெ­டுக்­கப்­பட்டு உள்­ளன.

சுடு­மண் புகைப்­பான், கல்­லால் ஆன எடைக்­கல், செப்பு நாண­யம், கண்­ணாடி மணி­கள், சுடு­மண் காதணி உள்­ளிட்ட பல­வும் அவற்­றில் அடங்­கும்.

அந்­தப் பகு­தி­யில் வாழ்ந்த தமிழர்­கள், வெளி­நா­டு­களில் வணிகம் செய்த­தற்­குச் சான்­றாக அந்­தப் பொருள்­கள் இருக்­கின்­றன என்று தொல்­லி­யல் துறை இயக்­கு­நர் தெரி­வித்­தார்.

ஆய்­வு­கள் தொடர்வதால் மேலும் தொன்மைப் பொருள்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.