20 ஆண்டுகளாகத் திருடிவந்த ஆடவர் 2வது மனைவி வீட்டில் தூங்கியபோது பிடிபட்டார்

2 mins read

திருப்­பத்­தூர்: சென்னை, பெங்களூரு உள்­ளிட்ட நகர்களில் 20 ஆண்­டு­க­ளாக திருடி வந்த 60 வயது ஆட­வர் 2வது மனைவி வீட்­டில் தூங்­கிக் கொண்­டி­ருந்­த­போது பிடி­பட்­டார்.

ஹாரி பிலிப்ஸ் என்ற அந்தத் திரு­டர், குடி­போ­தை­யில் தன்னை மறந்து தூங்­கி­ய­போது அவரை அதி­கா­ரி­கள் வளைத்துப் பிடித்­து­விட்­ட­னர்.

அவ­ரி­டம் இருந்து 47 பவுன் நகை­கள் மீட்­கப்­பட்டு உள்­ளன. அதி­கா­ரி­கள் அந்த ஆட­வ­ரை­யும் அவ­ரு­டைய இரண்­டா­வது மனை­வி­யான காந்­தி­ம­தி­யை­யும் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

ஹாரி பிலிப்ஸ் பல தொழில்­க­ளைத் தொடங்கி நடத்திப் பார்த்­தார். ஒன்­று­கூட உருப்­ப­ட­வில்லை.

ஆகை­யால், திருட்டு ஒன்று­தான் தனக்­குக் கைகொ­டுக்­கும் என்று முடிவு செய்து அந்­தத் தொழி­லில் தீவி­ர­மாக ஈடு­ப­டத் தொடங்­கி­னார்.

அவர் நினைத்­த­தைப் போலவே திருட்டு மூலம் பெரும் நகை­கள், பணத்தைத் தன­தாக்­கிக் கொண்டு ஆடம்­ப­ர­மா­கச் செல­விட்­டார்.

ஹாரி­யின் முதல் மனைவி­யும் பிள்­ளை­களும் அவரைக் கைவிட்­டு­விட்­ட­னர். அத­னால், ஹாரி, 50 வய­தான காந்­தி­மதியை இரண்­டா­வது மனை­வி­யாக்­கிக் கொண்­டார்.

சென்­னை­யில் மட்­டும் ஹாரி மீது 50க்கும் மேற்­பட்ட வழக்கு­கள் இருக்­கின்­றன என்று காவல்­துறை தெரி­வித்­தது. இது­வரை ஹாரி 23 முறை சிறைக்­குச் சென்­றி­ருக்­கி­றார்.

ஹாரி பல இடங்­களில் நகை­க­ளை­யும் பணத்­தை­யும் பதுக்கி வைத்து இருக்­கி­றார் என்று அதி­கா­ரி­கள் சந்­தே­கிக்­கி­றார்­கள்.

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த சீனி­வா­சன், 62, என்பவர், தன் வீட்­டில் இருந்த பீரோ உடைக்­கப்­பட்டு 120 பவுன் தங்க நகை, 4000 ரூபாய் ரொக்­கம் ஆகி­யவை திருட்டுப் போன­தாக காவல்­து­றை­யில் புகார் தெரி­வித்­தார்.

அந்த வீட்­டில் கைவ­ரிசை காட்­டி­யது திருப்­பத்­தூரைச் சேர்ந்த ஹாரி­தான் என்­பதை கண்­கா­ணிப்­புப் படச் சாதனங்­கள் காட்­டிக்­கொ­டுத்­தன. அதை­ய­டுத்து ஹாரி பிடி­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.