கட்டட வேலைக்குப் போன கணவர் காலிழந்தார்; கடல்தாண்டிய மகன் சக்கரநாற்காலியில் வந்தார்

கட்டட வேலைக்குப் போன கணவர் காலிழந்தார்; கடல்தாண்டிய மகன் சக்கரநாற்காலியில் வந்தார்

1 mins read
6bd6a1e3-9e31-4285-b1d1-cdbd47f1af31
-

சென்னை: கட்­டட வேலை பார்த்து வந்த சுப்­பையா, 55, என்ற தன் கண­வர் வேலை­யில் அடி­பட்டு காலை இழந்­து­விட்­டதை அடுத்து தன் இரண்டு மகன்­க­ளு­டன் மிக­வும் வறு­மை­யில் வாடிய அழகி, 50, என்ற ஒரு தாய், வேலை பார்த்து சம்­பா­திக்க தன் மூத்த மகனை வெளி­நாட்­டிற்கு அனுப்பி வைத்­தார்.

ஆனால் கடல் தாண்டி மத்திய கிழக்கு நாடான பக்­ரேனுக்கு வேலைக்­குச் சென்ற வீர­பாண்டி, 25, என்ற அந்த மக­னும் அந்நாட்டில் விபத்­தில் சிக்கி சக்­கர நாற்­காலியில் நட­மாடும் நிலை ஏற்­பட்­டு­விட்­டது.

தன் மகனை உயி­ரோடு பார்த்­தாலே போதும் என்று தவி­யாய்த் தவித்த அந்த தாய், மக­னைச் சொந்த ஊருக்­குக் கொண்­டு­வர நான்கு மாத காலமாக படா­த­பா­டு­பட்­டார்.

சமூக ஆர்­வ­லர் மூலம் மாநில அமைச்­சர் உத­வி­ய­தன் கார­ண­மாக சென்னை விமான நிலை­யத்­தில் வந்து இறங்­கிய தன் மகனை விமான நிலை­யத்­தில் காத்­தி­ருந்து சந்­தித்து அந்­தத் தாய் கண்­ணீர் சிந்தி கத­றி­ய­தைக் கண்டு அங்­கிரு­ந்த பல­ரும் கலங்­கி­விட்­ட­தாக ஊட­கங்­கள் தெரி­வித்­தன. பிறகு வீர­பாண்டி, சென்னை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

சுப்­பையா-அழகி தம்­ப­தி­யர் புதுக்­கோட்டை மாவட்­டம் பொன்­ன­ம­ரா­வ­தி­யைச் சேர்ந்­த­வர்­கள்.

அவர்­க­ளுக்கு பெரு­மாள், 22, என்ற மற்­றொரு மக­னும் இருக்­கி­றார்.