'அன்றைய சொல்லியலுக்கு இன்றைய தொல்லியல் ஆதாரம்'

'அன்றைய சொல்லியலுக்கு இன்றைய தொல்லியல் ஆதாரம்'

1 mins read

சென்னை: சங்க இலக்­கிய சொல்­லி­யல் அனைத்­திற்­கும் இப்­போது தொல்­லி­யல் ஆதா­ரம் கிடைத்து இருக்­கிறது என்று தமி­ழக முதல்வர் ஸ்டா­லின் பெரு­மை­பட குறிப்­பிட்­டார்.

மிக­மி­கப் பழ­மை­யான சிந்து சம­வெளி நாக­ரி­கம், தொன்­மை­யான தமி­ழி­னத்­திற்கே உரி­யது என்­றும் சிந்து சம­வெளி பண்­பாட்­டிற்­குச் சொந்­தம் கொண்­டா­டும் உரிமை தமி­ழர்­க­ளுக்கே உள்­ளது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

சென்னை முத்­தையா ஆய்வு நூல­கம் சார்­பில் ஆர். பால­கி­ருஷ்­ணன் எழு­திய 'ஒரு பண்­பாட்­டின் பய­ணம்: சிந்து முதல் வைகை வரை' என்ற நூலை வெளி­யிட்டு பேசிய முதல்­வர், சங்க இலக்­கி­யங்­களைத் திரா­விட இயக்க மேடை­களில் முழங்­கி­ய­போது, 'இதெல்­லாம் இலக்­கி­யம்­தானே. வர­லாறு இல்­லையே' என்று பலரும் நிரா­க­ரித்­த­தைச் சுட்டிக்­காட்­டி­னார்.

அந்த சொல்­லி­யல் அனைத்­திற்­கும் இப்­போது தொல்­லி­யல் ஆதா­ரம் கிடைத்து வரு­வ­தாக முதல்­வர் குறிப்­பிட்­டார்.

சிந்து சம­வெளி நாக­ரி­கம் 5,000 ஆண்­டு­கள் பழ­மை­யா­னது. அந்த நாக­ரி­கத்­திற்குச் சொந்­தக்­கா­ரர்­கள் தமி­ழர்­களே என்­பதற்­கான ஆதா­ரங்­கள் மேலும் மேலும் கிடைத்து வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

ஒடிசா மாநில முன்­னாள் மாவட்ட ஆட்சியரும் தமி­ழி­யல், இந்­தி­ய­வி­யல் ஆய்­வா­ள­ரு­மான ஆர்.பால­கி­ருஷ்­ணன் அந்த நூலை எழுதி இருக்கிறார்.

அவர், சிந்து பண்­பாடு பரவியிருக்­கும் குஜ­ராத், மகா­ராஷ்டிரா, ஆப்­கா­னிஸ்­தான், பாகிஸ்­தான், ஈரான் போன்ற இடங்­க­ளுக்­குச் சென்று ஆய்வு செய்து, அங்கு பற்பல தமிழ்ப் பெயர்­கள் இருப்­பதை நூலில் பதி­விட்டுள்­ளார் என்று முதல்­வர் ஸ்டா­லின் தெரி­வித்­தார்.