மதுரையில் 8,000 ஆண்டுகள் பழைமையான அரைவை அமைப்பு

மதுரையில் 8,000 ஆண்டுகள் பழைமையான அரைவை அமைப்பு

1 mins read

மதுரை: ஏறக்­கு­றைய எட்­டா­யி­ரம் ஆண்­டு­கள் பழைமை வாய்ந்த அரை­வைத் தொழில்­நுட்­பத்தை வெளிப்­ப­டுத்­தும், பாறை­யில் உரு­வாக்­கப்­பட்ட அமைப்பு மது­ரை­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இராம­நா­த­பு­ரம் தொல்­லி­யல் ஆய்வு நிறு­வ­னம் மேற்­கொண்ட ஆய்­வின்­போது கண்­டு­பி­டிக்­கப்­பட்ட இந்த அமைப்பு புதிய கற்­கா­லத்­தைச் சேர்ந்­தது என்­றும் தானி­யங்­களை அரைப்­ப­தற்­கான அமைப்பு என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது என்று நிறுவனத் தலை­வர் வே.ராஜ­குரு தெரி­வித்­துள்­ளார்.

திரு­மங்­க­லம் தே.கல்­லுப்­பட்டி அருகே உள்ள கோபால்­சாமி மலைப் பகு­தி­யில் பழ­மை­யான தொல்­லி­யல் தட­யங்­கள் இருப்­ப­தாகக் கிடைத்த தக­வ­லின் பேரில் அங்கு ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

"கல்­லா­லான வட்­டச்­சில்லு, அரைப்­புக்­கற்­கள், சிவப்பு நிறப் பானை ஓடு­கள், புதிய கற்­கால கற்­கோ­டரி, இரும்­புக் கச­டு­கள் ஆகி­யவை கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன," என்­றார் திரு ராஜ­குரு.