மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் உதவிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் உதவிகள்

3 mins read

சென்னை: தமி­ழக அரசு மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளிக்­குக் கூடு­தல் உத­வித் திட்­டங்­களை அறி­வித்­துள்­ளது. சட்­ட­மன்­றத்­தில் நேற்று முன் தினம் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் மானி­யம் தொடர்­பான விவா­தத்­தின்­போது சமூ­க­ந­லத் துறை அமைச்­சர் கீதா ஜீவன் அத­னைத் தெரி­வித்­தார்.

"மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு அர­சால் ஒதுக்­கப்­பட்ட வீடு­க­ளுக்கு, பய­னா­ளி­யின் பங்­குத் தொகை­யைச் செலுத்­து­வ­தற்­காக வட்­டி­யில்லா வங்­கிக் கடன் உதவி வழங்­கப்­படும்.

"உயர்­கல்வி பயி­லும் பார்வை அற்ற மாண­வர்­கள் 1,000 பேருக்கு ஆளுக்கு ரூ.14 ஆயி­ரம் மதிப்­பில் நவீன வாசிக்­கும் கரு­வி­கள் வழங்­கப்­படும்," என்று அமைச்­சர் கூறி­னார்.

தற்­போது இரு கால்­களும் இல்­லா­தோ­ருக்கு இணைப்­புச் சக்­க­ரங்­கள் பொருத்­தப்­பட்ட பெட்­ரோல் ஸ்கூட்­டர் வழங்­கும் திட்­டம் நடை­மு­றை­யில் உள்­ளது. அது ஒரு கால் மட்­டும் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

"உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் மூலம் கட்­டப்­படும் வணிக வளா­கங்­களில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு ஐந்து விழுக்­காடு ஒதுக்­கீடு செய்­யப்­படும்.

"தமிழ்­நாடு மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் நல வாரி­யத்­தின் மூல­மாக வழங்­கப்­பட்டு வரும் விபத்து, நிவா­ர­ணம், மருத்­து­வம், கல்வி உள்­ளிட்­ட­வற்­றுக்­கான உத­வித்­தொகை உயர்த்­தப்­படும். அதற்­காகக் கூடு­த­லாக ரூ.2 கோடி நிதி ஒதுக்­கப்­படும்," என்­றார் அமைச்­சர் கீதா ஜீவன்.

காது கேளா­தோர் பய­ன­டை­யும் வகை­யில், சைகை மொழி­பெ­யர்ப்­பா­ளர் பயிற்சி அளிக்­கும் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­படும். அரசு நடத்­தும் கூட்­டங்­களில் காது கேளா­தோ­ருக்­கும் மற்­ற­வர்­க­ளுக்­கும் இடை­யி­லான கருத்­துப் பரி­மாற்­றத்தை எளி­தாக்க இத்­திட்­டம் உத­வும் எனக் கூறப்­பட்­டது.

"மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் சேவை­யில் ஈடு­பட்­டுள்ள அரசு நிதி உதவி பெறும் 92 ஆரம்­ப­நிலைப் பயிற்சி மையங்­கள், 56 மறு­வாழ்வு இல்­லங்­கள், மன­ந­லம் குன்­றி­யோர்க்­கான 70 பரா­ம­ரிப்பு இல்­லங்­கள் ஆகி­ய­வற்­றில் பணி­பு­ரி­யும் பணி­யா­ளர்­க­ளுக்கு மதிப்­பூ­தி­யம் உயர்த்­தப்­படும்.

"அரசு நிதி உத­வி­யு­டன் தன்­னார்­வத் தொண்டு நிறு­வ­னங்­க­ளால் நடத்­தப்­படும் 326 சிறப்­புப் பள்­ளி­களில் பயி­லும் மாற்­றுத்­திறன் குழந்­தை­க­ளைப் பரா­ம­ரிக்க மாதந்­தோ­றும் ரூ.4,500 மதிப்­பூ­தி­யத்­தில் பரா­ம­ரிப்பு உத­வி­யா­ளர்­கள் நிய­மிக்­கப்­ப­டு­வர்," என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

அரசு மறு­வாழ்வு இல்­லங்­களில், தொழு­நோ­யால் பாதிக்­கப்­பட்டு குணம் அடைந்து தங்கி உள்ள 592 மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு உண­வூட்டு மானி­யம் உயர்த்­தப்­ப­ட­வி­ருக்­கிறது.

மன­ந­லம் பாதிக்­கப்­பட்டு குணம் அடைந்­த­வர்­களை மீண்­டும் சமு­தா­யத்­தில் ஒருங்­கி­ணைப்­ப­தற்­காக மீண்­டும் இல்­லம் எனும் புதிய திட்­டம் முதல்­கட்­ட­மாக ஐந்து மாவட்­டங்­களில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்.

மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு நான்கு விழுக்­காடு இட­ஒ­துக்­கீட்­டின்­கீழ் அர­சுத் துறை­களில் உள்ள பின்­ன­டைவு காலிப்­ப­ணி­இடங்­களை ஓராண்­டிற்­குள் நிரப்பு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அமைச்­சர் தெரிவித்தார்.

மாற்­றுத்­தி­றன் மாண­வர்­களுக்கு வழங்­கப்­பட்டு வரும் கல்வி உத­வித்­தொகை இரு மடங்­காக உயர்த்­தப்­படும். இத­னால் 22,300 மாண­வர்­கள் பயன்­பெ­று­வர் என்று கூறப்­பட்­டது.

மன­ந­லம் குன்­றிய மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் நல­னுக்­காக திரு­வா­ரூர், மயி­லா­டு­துறை மாவட்­டங்­களில் நான்கு ஏக்­கர் நிலம் ஒதுக்­கப்­பட்டு மூன்று இல்­லங்­கள் கட்­டப்­படும்.

அரசு நிதி உத­வி­யு­டன் தன்­னார்வ தொண்டு நிறு­வ­னங்­க­ளால் நடத்­தப்­படும் சிறப்புப் பள்ளி­கள் மற்­றும் ஆரம்ப நிலைப் பயிற்சி மையங்­களில் பயி­லும் மாற்­றுத்­தி­றன் குழந்­தை­க­ளுக்கு இணை உணவு, மதிய உணவு வழங்­கும் திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­படும்.

மேலும், கோட்ட அள­வில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு 39 ஒருங்­கி­ணைந்த சேவை மையங்­கள் தொடங்­கப்­படும் என்று முதல்­வர்் மு.க.ஸ்டா­லின் சார்­பில் சமூ­க­ந­லத்­துறை அமைச்­சர் கீதா ஜீவன் தெரி­வித்­தார்.