சட்டமன்ற நிகழ்ச்சிகள் சைகை மொழியில் ஒளிபரப்பு

சட்டமன்ற நிகழ்ச்சிகள் சைகை மொழியில் ஒளிபரப்பு

1 mins read

சென்னை: சட்­டப்­பே­ரவை நிகழ்ச்­சி­க­ளின் தொகுப்பை, காது கேளா­தோர் புரிந்­து­கொள்­ளும் வகை­யில் சைகை மொழி­யில் ஒளி­ப­ரப்­பும் நிகழ்ச்­சியை முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தொடங்கி வைத்­துள்­ளார்.

தற்­போது நடை­பெ­றும் சட்­டப்­பே­ர­வைக் கூட்­டத்­தொ­டர் நிகழ்ச்­சி­களை, சைகை மொழி­பெ­யர்ப்­பா­ளர் மூல­மாக சைகை விளக்­கக் காணொ­ளி­யா­கத் தயா­ரித்து, செய்­தித் துறை வாயி­லாக அதை ஊட­கங்­களில் ஒளி­ப­ரப்பு செய்ய முதல்­வர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

அதற்­கான சைகை மொழி­யில் பதி­வு­செய்­யும் நிகழ்ச்­சியை பேர­வைத் தலை­வர் அப்­பாவு முன்­னி­லை­யில் நேற்று முன்­தி­னம் முதல்­வர் ஸ்டா­லின் தொடங்­கி­வைத்­தார்.

இது­தொ­டர்­பாக தமி­ழக அரசு வெளி­யிட்ட செய்­திக்­கு­றிப்­பில், மாற்­றுத்திற­னா­ளி­க­ளுக்­குப் பொது இடங்­களில் தடை­யற்ற சூழலை ஏற்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வதைச் சுட்­டி­யுள்­ளது.