பேருந்துகளில் கட்டணச் சலுகை ரத்து: அரசு

பேருந்துகளில் கட்டணச் சலுகை ரத்து: அரசு

1 mins read

சென்னை: குளிர்சாதனம் பொருத்தப்பட்டுள்ள அரசுப் பேருந்துகளில் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டணச் சலுகை ஜூன் மாதம் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையில் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களில் பலரும் சாதாரணப் பேருந்துகளைவிட குளிர்சாதனம் பொருத்தப்பட்ட பேருந்துகளில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர்.

அதனால் அத்தகைய பேருந்துகளுக்கு வழங்கப்படும் 10 விழுக்காடு வரையிலான கட்டணச் சலுகை ரத்து செய்யப்படுவதாக மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

சாதாரண பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும்.

அரசு விரைவுப் பேருந்துகளில் கழிப்பறை வசதி உடையவை, குளிரூட்டப்பட்ட தூங்கும் வசதி உடையவை, தூங்கும் வசதியுடையவை ஆகியவற்றில் முழுக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

சலுகை ரத்தானதால் முழுக்கட்டணத்திற்கு ஏற்ப ரூ.65 முதல் ரூ.125 வரை பயணிகள் அதிகம் செலுத்த வேண்டும்.

தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற நாள்களில் முழுக்கட்டணம் வசூலிக்கும் முறை ஏற்கெனவே நடப்பில் உள்ளது.

ஜூன் 15ஆம் தேதிக்குப் பிறகு கட்டணச் சலுகை மீண்டும் நடப்புக்கு வரும்.