மாமல்லபுரத்தில் அனைத்துலக அலைச்சறுக்குப் போட்டி

1 mins read

சென்னை: மாமல்­ல­பு­ரத்­தில் இவ்­வாண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை அனைத்­து­லக அலைச்­ச­றுக்­குப் போட்டி நடை­பெ­ற­வி­ருக்­கிறது.

தமி­ழக விளை­யாட்­டுத்­துறை அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டா­லின் நேற்று அத­னைத் தெரி­வித்­தார்.

தமி­ழக அர­சின் இளை­யர் நலன், விளை­யாட்டு மேம்­பாட்­டுத் துறை, தமிழ்­நாடு அலை­யா­டல் சங்­கம், இந்­திய அலை­யா­டல் சம்­மே­ள­னம் ஆகி­யவை இணைந்து இந்­தி­யா­வில் முதல்­மு­றையாக அனைத்­து­லக அலைச்­ச­றுக்­குப் பொதுப் போட்­டியை நடத்­து­கின்­றன.

அந்­தப் போட்­டிக்­காக, தமிழ்­நாடு அரசு சார்­பில் இரண்டு கோடியே 67 லட்­சம் ரூபாய்க்­கான காசோ­லையை அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டா­லின் தமிழ்­நாடு அலைச்­ச­றுக்­குப் போட்டி சங்­கத்­தி­டம் வழங்­கி­னார்.

பல்­வேறு வகை­யான விளை­யாட்­டுப் போட்­டி­களில் தேசிய அரங்­கி­லும் அனைத்­து­லக நிலை­யி­லும் தனித்­து­வத்தை உறு­தி­செய்­யும் தமி­ழ­கம், அண்­மைக் கால­மாக 'சர்­ஃபிங்' எனும் அலைச்­ச­றுக்கு விளை­யாட்டை ஊக்­கு­விப்­ப­தில் முன்­னணி வகிக்­கிறது.

2028ஆம் ஆண்டு நடை­பெறும் ஒலிம்­பிக் விளை­யாட்­டுப் போட்­டி­களில் அலைச்­ச­றுக்­கில் தங்­கப் பதக்­கம் வெல்­லும் இலக்கை எட்­டும் வகை­யில், அலைச்­ச­றுக்கு விளை­யாட்­டா­ளர்­க­ளுக்கு அதி நவீன வச­தி­கள், உள்­கட்­ட­மைப்பு ஆகி­யவற்றை அமைத்துத் தருவதில் தமி­ழக அரசு கவ­னம் செலுத்தி­வ­ரு­கிறது.

அனைத்துலக வல்லுநர்கள் உதவியுடன் விளை­யாட்டாளர்­க­ளுக்குப் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.