பெரம்பூர்: பெரம்பூர் பாரதி சாலையில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் ஒன்று, முதலீட்டாளர்களுக்கு 12 விழுக்காட்டு வட்டியுடன் பணம் தருவதாக விளம்பரம் செய்தது.
அதை நம்பி ஏராளமானோர் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை லட்சக்கணக்கில் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் விளம்பரத்தில் கூறியபடி நிதி நிறுவனம் பணத்தைக் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் புகார் செய்தனர்.
அதன் அடிப்படையில் பொருளியல் குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கூடுதல் பணம் தருவதாக பொதுமக்களின் முதலீடுகளைப் பெற்று ரூ.200 கோடி வரை மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நிதி நிறுவனத்தின் இயக்குநர்களான வசந்தி ஈஸ்வரப்பன், சக்தி ஐஸ்வர்யா, ராஜம் கண்ணன் மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை தொடர்கிறது.

