சிறுமியின் கருக்கலைப்புக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

சிறுமியின் கருக்கலைப்புக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

1 mins read

சென்னை: திரு­வண்­ணா­மலை மாவட்­டத்­தைச் சேர்ந்த கூலித் தொழி­லா­ளி­யின் 14 வயது மகள் கரு­வுற்­றது அண்­மை­யில் தெரி­ய­வந்­தது.

பெற்­றோர் வீட்­டில் இல்­லா­த­போது உற­வி­னர் ஒரு­வர் சிறு­மியை மிரட்­டிப் பாலி­யல் உறவு கொண்­ட­தா­கக் கூறப்­பட்­டது. ஆட­வர்­மீது வழக்­குப் பதிவு செய்­யப்­பட்ட நிலை­யில், கர்ப்­பம் தொடர்ந்­தால் சிறு­மி­யின் உயி­ருக்கு ஆபத்து என்று கருக்­கலைப்பு சட்­டக் குழு அறிக்கை அளித்­துள்­ளது.

இதற்­கி­டையே சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் சிறு­மி­யின் தந்தை மக­ளின் கரு­வைக் கலைக்க உத்­த­ர­வி­டக் கோரி­யி­ருந்­தார். இரு வாரங்­களில் கரு­வைக் கலைக்க திரு­வண்­ணா­மலை அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னைக்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.