பாஜகவை எதிர்த்து அதிமுக போட்டி

பாஜகவை எதிர்த்து அதிமுக போட்டி

1 mins read

பெங்­க­ளூரு: கர்­நா­டக மாநில சட்­ட­மன்­றத் தேர்­த­லில் பாஜக வேட்­பா­ள­ருக்கு எதி­ராக அதி­முக வேட்­பா­ளர் அறி­விக்­கப்­பட்டு உள்­ளார்.

பாஜக தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­ய­கக் கூட்­ட­ணி­யில் அதி­முக இடம்­பெற்­றுள்­ளது. தமிழ்­நாட்­டி­லும் அதி­முக தலை­மை­யில் பாஜக கூட்­டணி தொட­ர்­கிறது என்­ப­து­தான் பாஜக, அதி­முக தலை­வர்­க­ளின் கருத்­தாக உள்­ளது.

அதன் அடிப்­ப­டை­யில், மே 10ஆம் தேதி நடை­பெற இருக்­கும் கர்­நா­டக மாநில சட்­ட­மன்­றத் தேர்­த­லில் பாஜக கூட்­ட­ணி­யில் இணைந்து போட்­டி­யிட அதி­முக விருப்­பம் தெரி­வித்து இருந்­தது.

ஆனால், பாஜக தரப்­பி­லி­ருந்து எந்­த­வித ஒப்­பு­த­லும் அதி­மு­க­வுக்­குக் கிடைக்­க­வில்லை.

எனவே பாஜக மீதான அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தும் வித­மாக தனியே கள­மி­றங்க அதி­முக பொதுச் செய­லா­ளர் எடப்­பாடி பழ­னி­சாமி முடி­வெ­டுத்­தார்.

அத­னைத் தொடர்ந்து, புலி­கேசி நகர் தொகு­தி­யில் கர்­நா­டக மாநில அதி­முக அவைத் தலை­வர் அன்­ப­ர­சன் (படம்) போட்­டி­யி­டு­வார் என்று நேற்­றுக் காலை பழ­னி­சாமி அறி­வித்­தார்.

புலி­கேசி நகர் தொகு­தி­யில் ஏற்­கெ­னவே பாஜக வேட்­பா­ள­ராக முரளி அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் அவரை எதிர்க்­கும் வித­மாக அதி­மு­க­வும் அந்­தத் தொகு­திக்­கான வேட்­பா­ளரை அறி­வித்­துள்­ளது.