பாஜக இளையரணித் தலைவர் குத்திக் கொலை

பாஜக இளையரணித் தலைவர் குத்திக் கொலை

1 mins read
40855613-3f0b-4daf-a1fa-118f532fc137
-
Google News Preferred Icon

கர்நாடக மாநிலம் தார்வாட் தாலுகாவில் உள்ள கோட்டூர் கிராம பாஜக இளையர் பிரிவு தலைவரும் கோட்டூர் கிராம பஞ்சாயத்து துணைத் தலைவருமான பிரவீன் கம்மர், 36, (படம்) நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். கோவில் திருவிழாவில் பிரசாதம் வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராற்றில் அவர் குத்திக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் கூறினர். ஆனால், அரசியல் எதிரிகளால் பிரவீன் கொல்லப்பட்டதாக பாஜக இளையர் பிரிவு தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார்.