திருப்பதி: தெலுங்கானா மாநிலம் மெகபூபாபாத் சங்கர் தாண்டவைச் சேர்ந்த புக்யா பிகோஜி என்பவரது மகன் சித்து, 7, சில மாதங்களுக்குமுன் மின்சாரம் தாக்கி இறந்தார். துக்கம் தாளாது சோகத்திலிருந்த பெற்றோர், மகனுக்குச் சிலை வைக்க முடிவுசெய்தனர். அதன்படி ஐந்து அடி உயர மெழுகுச் சிலை (படம்) தயார்செய்து வாங்கினர். தங்களது நிலத்தில் சிறிய மண்டபம் கட்டி அங்கு மகனின் சிலையை நிறுவி, தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் பூசை செய்து பெற்றோர் வணங்கி வருகின்றனர்.
மகனுக்குச் சிலை
1 mins read
-

