கஞ்சா செடி: மகன் எடுத்த காணொளி; சிக்கிய தந்தை

கஞ்சா செடி: மகன் எடுத்த காணொளி; சிக்கிய தந்தை

1 mins read
533eccff-d04c-46d5-b8c9-faff26e4e213
-

காஞ்சிபுரம்: சொந்த பயன்­பாட்­டுக்­காக தன் வீட்­டி­லேயே கஞ்சா செடியை வளர்த்து வந்த காஞ்­சி­பு­ரத்­தைச் சேர்ந்த கார் ஓட்­டு­நரான கண்­ணு­சாமி கைதா­னார்.

அவ­ரது மகன் கைபே­சி­யில் எடுத்த காணொ­ளியை நண்­பர்­க­ளு­டன் பகிர்ந்­த­தால் கண்­ணு­சாமி சிக்க நேர்ந்­தது.

43 வய­தான அவர் திடீ­ரென வீட்டில் சிறு தொட்டி அமைத்து கஞ்சா செடியை வளர்க்­கத் தொடங்­கி­னார்.

மனைவி சந்­தே­கப்­பட்டு விசா­ரித்­த­போது, தாம் வளர்ப்பது புளித்­த­கீரை என்று கூறி­யுள்­ளார் கண்­ணு­சாமி.

அந்­தச் செடி சுமார் மூன்று அடி வரை வளர்ந்த நிலை­யில், பள்­ளி­யில் படித்து வரும் அவரது மகன், கஞ்சா செடியை காணொளி­யா­கப் படம்­பி­டித்து, 'எங்­கள் வீட்­டில் வள­ரும் கஞ்சா செடி' என்று குறிப்­பிட்டு, நண்­பர்­க­ளு­டன் பகிர்ந்­துள்­ளான்.

அதை ஏரா­ள­மா­னோர் மற்­ற­வர்­க­ளு­டன் பகிர, காவல்­து­றைக்­கும் தக­வல் கிடைத்­தது. இதை­ய­டுத்து கண்­ணு­சாமி கைதா­னார்.