நள்ளிரவில் இருசக்கர வாகனங்களில் சாகசம், பந்தயம்; விரட்டிச் சென்று பிடித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை

நள்ளிரவில் இருசக்கர வாகனங்களில் சாகசம், பந்தயம்; விரட்டிச் சென்று பிடித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை

1 mins read
309317b3-585c-440b-bd9d-76e8e6d7b3fa
-

சென்னை: நள்ளிரவில் இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் மீது சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக 33 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இளையர்கள் பலர் நள்ளிரவில் இருசக்கர வாகனங்களில் வேகமாகச் செல்வது, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாகசங்களில் ஈடுபடுவது வாடிக்கையாகி உள்ளது.

காவல்துறை பலமுறை எச்சரித்தும் இளையர்களின் போக்கு மாறவில்லை.

இதை­ய­டுத்து சென்னை மாநக­ரின் பல்­வேறு பகு­தி­களில் சாலைத் தடுப்­பு­கள் அமைத்து காவல்­துறை கண்­கா­ணிப்பு பணியை மேற்­கொண்டு வரு­கிறது.

நேற்று முன்­தி­னம் இரவு சென்னை அண்­ணா­சாலை, தேனாம்­பேட்டை, வள்­ளு­வர் கோட்­டம், சிந்­தா­தி­ரிப்­பேட்டை உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­களில் இளை­யர்­கள் இரு­சக்­கர சாக­சங்­களில் ஈடு­ப­டு­வ­தாக தக­வல் கிடைத்­ததை அடுத்து, காவல்­துறை­யின் கண்­கா­ணிப்பு தீவி­ர­மடைந்­தது.

அப்­போது 33 இரு­சக்­கர வாக­னங்­களை காவ­லர்­கள் பறி­மு­தல் செய்­த­னர். 33 வழக்­கு­களும் பதிவு செய்­யப்­பட்­டன.

அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டுதல், உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகத் தெரி கிறது.

முன்னதாக கைது, வழக்கு நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க, இளையர்கள் சிலர் வாகனத்தில் ஏறி ஓட்டம் பிடித்தனர். எனினும் காவலர்கள் சில கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று அவர்களைப் பிடித்தனர்.

இந்தச் சம்பவங்கள் திரைப் படங்களில் இடம்பெறும் காட்சிகளைப் போல் இருந்ததாக நேரில் கண்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.