தமிழ்நாட்டில் தடம்புரண்ட சரக்கு ரயில்; பல ரயில் சேவைகள் ரத்து

1 mins read
01652e69-3d09-43df-80de-5712018c2e45
மரண்டஹல்லி, ராயக்கோட்டை ரயில் நிலையங்களுக்கு நடவே சரக்கு ரயில் தடம்புரண்டது. படம்: இந்தியா டுடே -

சென்னை: தமிழ்நாட்டில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டதால் பயணிகள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன அல்லது வழிமாற்றி விடப்பட்டன.

வெள்ளிக்கிழமையன்று (21 ஏப்ரல்) மரண்டஹல்லி, ராயக்கோட்டை ரயில் நிலையங்களுக்கு நடுவே சரக்கு ரயில் தடம்புரண்டது.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தென்மேற்கு ரயில்வே அமைப்பு டுவிட்டரில் தெரிவித்தது.

தடம்புரண்ட ரயில் பெட்டிகளிலிருந்து சரக்குகளை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் அமைப்பு குறிப்பிட்டது.