சென்னை: சட்டப்பேரவையில் துதி பாடுவதுபோல் பேசினால், அந்தப் பேச்சை அவைக்குறிப்புகளில் இருந்து நீக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சபாநாயகரைக் கேட்டுக்கொண்டார்.
நேற்று முன்தினம் திமுக உறுப்பினர் ஜோசப் சேமுவல் திமுக குறித்து பேசியபோது குறுக்கிட்ட முதல்வர், இவ்வாறு புகழ் பாடுவதை விட்டுவிட்டு, அனைத்து உறுப்பினர்களும் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்றார்.
"திமுகவினர் ஏதேனும் ஒருவகையில் புகழ் பாடினால் இடைமறித்து நானே எழுந்து அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வேன்.
"எந்தத் துறை குறித்து விவாதம் நடைபெறுகிறதோ, அதைப் பற்றி மட்டுமே திமுக உறுப்பினர்கள் பேச வேண்டும்.
"பேரவையில் முதல் முறையாக பேசுவோர் வேண்டுமானால் துதி பாடுவதுபோல் பேசிவிட்டு போகட்டும். மற்றவர்கள் பேசினால் அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.

