ஆருத்ரா நிதி மோசடி: விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக திமுக அரசு உரிய நடவடிக்கைகளை
எடுத்து வருவதாகவும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் பேசிய அவர், நடப்பு ஆட்சியில்தான் இந்த ஊழல் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குகள் பதிவுசெய்து 22 பேர் எதிரிகளாக சேர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். அந்நிறுவனத்தின் இயக்குநர்கள், முகவர்கள் என பதினோரு பேர் கைதாகினர். மேலும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்களைக் கைது செய்யவும் முதலீட்டாளர் களுக்குப் பணத்தை திருப்பிக் கொடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ள தாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மீன் பிடிக்க ஆற்றில் வெடிபொருள் வீச்சு: உடல் சிதறி இளையர் பலி
சேலம்: மீன் பிடிப்பதற்காக ஆற்றில் வீசப்்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் ஆற்று நீருக்கடியில் நீந்திக் கொண்டிருந்த இளையர் உடல் சிதறிப் பலியானார். இச்சம்பவம்
நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் நிகழ்ந்தது. நாமக்கல்லைச் சேர்ந்த மோகன்குமார் என்பவர், தன் நண்பர் பூபதியுடன் சேலத்தில் உளள் உறவினர் மாரி வீட்டுக்குச் சென்றிருந்தார். மூவரும் அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர். மோகன்குமார்
நீருக்கடியில் நீந்திக்கொண்டிருக்க, பூபதி கரையோரப் பாறையில் நின்றிருந்தார். அப்போது அங்கு மீன்பிடிக்க வந்த ஊத்துக்குளிகாடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர், மீன்களை மொத்தமாகப் பிடிக்கத் திட்டமிட்டு, கைவசம் இருந்த பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடி மருந்து தோட்டாக்களை ஆற்றில் வீசியுள்ளார். வெடிமருந்து வெடித்துச் சிதறியதில் நீருக்கு அடியில் இருந்த மோகன் குமார் படுகாயமடைந்து நீருக்கு அடியிலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.
நான்கு விதமான சுவையைத்
தரும் அதிசய மாமரம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலில் நான்கு வகையான சுவை தரும் மாம்பழங்களைத் தரும் மாமரம் காய்க்கத் தொடங்கி உள்ளது. இது சுமார் 3,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மரம் எனக் கூறப்படுகிறது. இம்மரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய நால்வகைச் சுவை கொண்ட கனிகளைத் தருகிறது. அவற்றுக்கு தெய்வீகச் சக்தி இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

