வானிலை மையம்: ஐந்து நாள்கள் மழை பெய்யும்

வானிலை மையம்: ஐந்து நாள்கள் மழை பெய்யும்

1 mins read
5bd9db32-aaa9-4706-a705-0344777a5ccc
-

சென்னை: தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களில் கோடை வெயில் சுட்­டெ­ரித்து வரு­கிறது. இந்­நி­லை­யில், அடுத்த ஐந்து நாள்­க­ளுக்கு மாநி­லம் முழு­வ­தும் பர­வ­லாக மழை பெய்­யக்­கூ­டும் என வானிலை மையம் தெரி­வித்­துள்­ளது.

தென் மாவட்­டங்­களில் அதிக மழை பெய்­யும் எனக் கணிக்­கப்­பட்­டுள்­ளது. சென்­னை­யின் பெரும்­பா­லான பகு­தி­களில் வானம் மேக­மூட்­டத்­து­டன் காணப்­படும் என்­றும் சில இடங்­களில் மழை பெய்­யும் என்­றும் அம்­மை­யம் கூறி­யது.

இத­னி­டையே, சென்­னை­யில் உள்ள அண்ணா உயி­ரி­யல் பூங்­கா­வில் உள்ள விலங்­கு­களும் கோடை வெயி­லுக்கு தாக்­குப்­பி­டிக்க இய­லா­மல் வாடு­கின்­றன. இதை­ய­டுத்து சிறப்பு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இப்­பூங்­கா­வுக்கு வரும் பெரும்­பான்­மை­யான பார்­வை­யா­ளர்­கள் சிங்­கப்­பூர் மனித குரங்­கு­க­ளைத் தான் முத­லில் பார்க்க விரும்­பு­கி­றார்­கள். இக்­கு­ரங்­கு­க­ளுக்­காக பூங்கா நிர்­வா­கம் குடை வடி­வில் ஷவர் ஒன்றை அமைத்­துள்­ளது.

அதி­லி­ருந்து வரும் குளிர்ந்த தண்­ணீ­ரில் மனித குரங்­கு­கள் குளித்து மகிழ்­வ­து­டன் பல்­வேறு சேட்­டை­க­ளைச் செய்து பார்­வை­யா­ளர்­களை மகிழ்­விக்­கின்­றன.