புதிய சட்டம்: நான்கு நாள் வேலை, மூன்று நாள் விடுப்பு

புதிய சட்டம்: நான்கு நாள் வேலை, மூன்று நாள் விடுப்பு

2 mins read

நாள்தோறும் 12 மணி நேர வேலை; எதிர்ப்பை மீறி சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்

சென்னை: வாரந்­தோ­றும் நான்கு நாள்­கள் வேலை, மூன்று நாள்­கள் விடு­முறை என்ற புதிய சட்­டத்­தி­ருத்த மசோ­தாவை தமி­ழக அரசு நிறை­வேற்­றி­யுள்ளது.

இதற்கு திமு­க­வின் கூட்­ட­ணிக் கட்­சி­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்த போதி­லும், குரல் வாக்­கெ­டுப்பு மூலம் சட்­டப்­பே­ர­வை­யில் இம்­ம­சோதா நிறை­வே­றி­யது.

தற்­போது தொழிற்­சா­லை­களில் தின­மும் எட்டு மணி நேரம் வேலை, வாரத்­தில் ஒரு நாள் விடு­முறை என்ற நடை­முறை பின்­பற்­றப்­ப­டு­கிறது.

இதை மாற்­றி­ய­மைக்க வேண்­டும் என சில தரப்­பி­னர் வலி­யு­றுத்தி வந்­த­னர். இதை­ய­டுத்து தொழிற்­சாலை சட்­டத்­தி­ருத்த மசோதா ஒன்­றைக் கொண்டு வர தமி­ழக அரசு முடிவு செய்­தது.

தமி­ழ­கத்­தில் பல்­வேறு வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள் முத­லீடு செய்­யத் தொடங்கி உள்­ள­தா­க­வும் தொழிற்­சா­லை­களில் நெகிழ்­வுத்­தன்மை இருந்­தால் முத­லீ­டு­கள் அதி­க­ரிக்­கும் என்­றும் தமி­ழக அரசு விளக்­கம் அளித்­தது.

இதற்கு திமு­க­வின் கூட்­ட­ணிக் கட்­சி­கள் தொடக்­கத்­தி­லேயே கடும் எதிர்ப்பு தெரி­வித்­தன. எனி­னும் திட்­ட­மிட்­ட­படி சட்­டத்­தி­ருத்த மசோதா சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று முன்­தி­னம் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

மதி­முக, இரு கம்­யூ­னிஸ்ட் கட்­சி­கள், விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி ஆகி­ய­வற்­றின் எதிர்ப்­பை­யும் மீறி, சட்­டத்­தி­ருத்த மசோதா குரல் வாக்­கெ­டுப்பு மூலம் நிறை­வேற்­றப்­பட்­டது.

முன்­ன­தாக, தமி­ழக தொழில்­துறை அமைச்­ச­ரான தங்­கம் தென்­ன­ரசு, புதிய சட்­டத்­தி­ருத்த மசோதா குறித்து விளக்­கம் அளித்­தார். தமி­ழ­கத்­தில் தொழில் தொடங்க முன்­வ­ரும் நிறு­வ­னங்­கள் சில சலு­கை­களை எதிர்­பார்ப்­ப­தா­க­வும் அரசு அவற்றை அளிக்­கும் பட்­சத்­தில் வேலை­வாய்ப்­பு­கள் அதி­க­ரிக்­கும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

எதிர்க்­கட்­சி­கள் சுட்­டிக்­காட்டி­ உள்ள அம்­சங்­கள் குறித்து ஆராய உயர்­மட்­டக்­குழு அமைக்­கப்­படும் என்­றார் அவர். அதே சம­யம் புதிய மசோ­தாவை ஏற்­றுக்­கொள்­ளும் தொழி­லா­ளர்­க­ளுக்கு மட்­டுமே அதில் உள்ள விதி­மு­றை­கள் பொருந்­தும் என்­றும் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு கூறி­னார்.

"தொழி­லா­ளர்­கள் வாரத்­தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்­டும். நான்கு நாள்­க­ளுக்கு இந்த இலக்கை அடைந்­து­விட்ட நிலை­யில், ஐந்­தா­வது நாளும் வேலை செய்ய விரும்­பி­னால் அவர்­க­ளுக்கு சம்்ப­ளம் வழங்­கப்­படும். விருப்­பம் உள்ள தொழி­லா­ளர்­கள், தொழிற்­சா­லை­க­ளுக்கு மட்­டுமே இந்­தச் சட்­டம் பொருந்­தும்.

"தொழிற்­சா­லை­கள் சட்­டத் திருத்த மசோ­தா­வால் தொழி­லா­ளர்­க­ளுக்­கான பணி நேரம், வார விடு­முறை தொடர்­பாக எந்­தப் பாதிப்­பும் இருக்­காது," என்று தமி­ழக தொழி­லா­ளர் நலன், திறன் மேம்­பாட்­டுத்­துறை அமைச்­சர் கணே­சன் கூறி­யுள்­ளார்.

புதிய சட்­டம் குறித்து கருத்து தெரி­வித்த பாஜக எம்­எல்ஏ வானதி சீனி­வா­சன், இது யாருக்­கும் கட்­டா­யம் இல்லை என­வும் தொழி­லா­ளர்­கள் தங்­கள் விருப்­பப்்­படி செயல்­ப­ட­லாம் என்­றும் தெரி­வித்­தார்.