சென்னை: காலஞ்சென்ற முதல்வர் கருணாநிதி தமக்கு அய்யாதுரை என்ற பெயரைத்தான் சூட்ட இருந்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அவர் இத்தகவலைக் குறிப்பிட்டார்.
மு.க.ஸ்டாலின் என்ற பெயரைச் சூட்டியதற்கான காரணத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஏற்கெனவே விளக்கிவிட்டார்.
எனினும், அய்யாதுரை என்ற பெயரையும் அவர் பரிசீலித்தார் என்பது புதுத்தகவல் என்று திமுகவினர் தெரிவிக்கின்றனர்.
"எனக்கு முதலில் தலைவர் கலைஞர் வைக்க நினைத்த பெயர் அய்யாதுரை. அமைச்சர்கள் அனைவரும் தனித்தனி துறைகளுக்குப் பொறுப்பு வகித்தாலும் அனைவரும் அய்யாதுரையைச் சேர்ந்தவர்கள்தான்," என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

