மாணவர்களுக்கான மடிக்கணினித் திட்டம்: அரசின் செயல்பாட்டால் ரூ.68 கோடி இழப்பு

மாணவர்களுக்கான மடிக்கணினித் திட்டம்: அரசின் செயல்பாட்டால் ரூ.68 கோடி இழப்பு

1 mins read
abea2f2b-cd8e-4739-945a-2dfecf6807fe
-

சென்னை: கடந்த அதி­முக ஆட்சிக்­கா­லத்­தில் 12ஆம் வகுப்பு மாண­வர்­க­ளுக்­கான மடிக்­க­ணி­னி­களை வழங்­கும் திட்­டத்தை உரிய காலத்­துக்­குள் அன்­றைய அரசு செயல்­ப­டுத்­த­வில்லை என தணிக்­கைத்­துறை தலை­வ­ரின் அறிக்கை தெரி­விக்­கிறது.

இத­னல் அர­சுக்கு ரூ.68 கோடி இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த 2017-18ஆம் ஆண்டு போட்­டித் தேர்­வு­களை எழு­தும் 12ஆம் வகுப்பு மாண­வர்­க­ளுக்கு மடிக்­க­ணினி வழங்­கும் திட்­டத்தை தமி­ழக அரசு அறி­வித்­தி­ருந்­தது.

இதை­ய­டுத்து, ஏறக்குறைய 60 ஆயி­ரம் மடிக்­க­ணி­னி­கள் கொள்­மு­தல் செய்­யப்­பட்­டன.

எனி­னும், அவற்­றுள் ஏறத்தாழ எட்­டா­யி­ரம் மடிக்­க­ணி­னி­கள் மட்டுமே தேர்வு எழு­தும் மாண­வர்­களுக்கு வழங்­கப்­பட்­ட­தாக தணிக்­கைத்­துறைத் தலை­வர் தரப்பு தெரி­விக்­கிறது.

மீத­முள்ள மடிக்­க­ணி­னி­களை தேவைப்­படும் மாண­வர்­க­ளுக்கு வழங்க எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­கிறது தணிக்­கைத்­துறை தலை­வ­ரின் அறிக்கை.

இத­னால், அந்த ம­டிக்­க­ணினி­க­ளின் மின்கலங்க­ளுக்­கான உத்­த­ர­வா­தம் காலா­வதி ஆகி­விட்­ட­தா­க­வும் அதன் காரணமாக 68.71 கோடி ரூபாய் தேவை­யற்ற செலவு ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் அறிக்­கை­யில் விவ­ரிக்­கப்­பட்­டு உள்ளது.