'காவல்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படவில்லை'

'காவல்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படவில்லை'

1 mins read

சென்னை: தமி­ழக காவல்­து­றைக்­காக மத்­திய அரசு ஒதுக்­கிய ரூ.74 கோடி தொகை பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என மத்­திய தணிக்­கைத்­துறை தலை­வர் அலு­வ­ல­கம் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக அந்த அலு­வ­ல­கம் வெளி­யிட்ட அறிக்­கை­யில், காவல்­து­றையை நவீ­ன­ம­ய­மாக்­கும் திட்­டத்­துக்­காக இத்­தொகை ஒதுக்­கப்­பட்­ட­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

காவல்­து­றையை நவீ­ன­ம­ய­மாக்­கும் திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­து­வ­தில் ஏற்­பட்ட கால­தா­ம­தத்தை சுட்­டிக்­காட்­டி­யுள்ள அந்த அறிக்கை, தாம­தம் கார­ண­மாக ரூ.14.37 கோடி அள­வுக்கு வீண் செல­வு­கள் ஏற்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கிறது.

"தமி­ழக காவல்­து­றைக்­காக கடந்த 2015ஆம் ஆண்டு முன்­வைக்­கப்­பட்ட இரண்டு திட்­டங்­களுக்கு மத்­திய அரசு ஒப்­பு­தல் அளித்­தது. அவற்­றுள் காவல் கட்­டுப்­பாட்டு அறை­களை நவீ­ன­ம­ய­மாக்­கு­த­லும் சென்­னை­யில் கண்­கா­ணிப்­புக் கரு­வி­க­ளைப் பர­வ­லாக நிறு­வு­வ­தும் முக்­கிய திட்­ட­மா­கும்.

"தக­வல் தொடர்பு வலை­ய­மைப்பை மேம்­ப­டுத்­தும் நோக்­கம் இன்­னும் எட்­டப்­ப­ட­வில்லை. எனவே, மத்­திய அர­சின் நிதியை இது­வரை செல­வி­ட­வில்லை," என கணக்­குத்­த­ணிக்­கைத் துறை தலை­வ­ரின் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தமி­ழகக் காவல்­து­றையை நவீன­ம­ய­மாக்­கும் திட்­டங்­க­ளுக்கு மத்­திய அரசு 60 விழுக்­காடு நிதி ஒதுக்­கு­கிறது.