திண்டுக்கல்: பள்ளி மாணவிகளுக்காக தமிழக அரசு வழங்கிய விலையில்லா மிதிவண்டிகள் பழைய இரும்புக் கடைகளில் விற்கப்பட்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
கொடைக்கானலில் இயங்கி வரும் தனியார் பள்ளி நிர்வாகம் அரசு வழங்கிய மிதிவண்டிகளை மாணவிகளுக்கு வழங்காமல் இவ்வாறு செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களைச் சேர்ந்த பல சிறுமிகள் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். மாணவிகள் பள்ளிக்குச் செல்ல வசதியாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
ஆனால் அவற்றைப் பெற்றுக்கொண்ட ஒரு தனியார் பள்ளியின் நிர்வாகம் அவற்றை மாணவிகளுக்கு வழங்காமல் அப்பகுதியில் உள்ள பழைய இரும்புக் கடைக்கு விற்றுள்ளது.
விலையில்லா மிதிவண்டிகளில் தமிழக அரசின் முத்திரை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருக்கும். அதை வைத்தே அரசு மிதிவண்டிகளுக்கு ஏற்பட்ட கதி தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் விசா ரித்து வருகின்றனர்.

