வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 கற்சிலைகள் பறிமுதல்
சென்னை: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த 55 கற்சிலைகளை சென்னை காவல்துறை பறிமுதல் செய்தது. அவற்றின் மதிப்பு எவ்வளவு என்பது தெரியவில்லை. இந்தச் சிலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை சிலைக் கடத்தல் மன்னன் என்று குறிப்பிடப்படும் தீனதயாளனிடம் இருந்து வாங்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது. இதுகுறித்துச் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள அந்த வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடக்கிறது.
கலாஷேத்ரா: பாலியல் தொல்லை குறித்துப் புகாரளிக்க இணையத்தளம்
சென்னை: பாலியல் தொல்லை குறித்துக் கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் புகார் அளிக்க புதிய இணையத் தளம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவிகள் இனி தயக்க மின்றிப் புகார் அளிக்கலாம் என்று கலாஷேத்ரா நிர்வாகம் அமைத்த மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு தெரி வித்தது. புகார் அளித்தவர்களின் பெயர்கள், புகார் தொடர் பான மற்ற விவரங்கள் வெளியே கசிந்து விடாமல் ரகசி யம் காக்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
பூங்காவைக் கண்டுபிடிக்க பதாகை
சென்னை: மாநகராட்சி அமைத்த பூங்காவைக் காண வில்லை என்றும் அதைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் எனவும் சென்னை யைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுப்பிரமணி தெரிவித்துள் ளார். இந்த அறிவிப்புடன் கூடிய பதாகை ஒன்றை அவர் திருவொற்றியூர் பகுதியில் உள்ள முக்கிய சாலையில் வைத்துள்ளார். அப்பகுதியில் மாநகராட்சி அமைத்த கேசவன் பூங்காவை சிலர் முழுமையாக ஆக்கிரமித்துள் ளனர். எனவே பொதுமக்களால் பூங்காவை எந்த வகை யிலும் பயன்படுத்த முடியவில்லை என்றார் அவர்.
ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த விமா னத்தில் பயணி ஒருவர் மறைத்து எடுத்து வந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரது உடைமைகளைச் சோதனையிட்டபோது ஏதும் சிக்க வில்லை. இதையடுத்து கால் மூட்டு வலிக்காக அவர் போட்டிருந்த பேண்டேஜ் குறித்து சந்தேகம் எழுந்தது. எனவே அதிகாரிகள் அதை அகற்றியபோது அதில் கடத்தல் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஒரு கிலோ 128 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

