மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதை அடுத்து, மதுரை மாவட்டம் களைகட்டி உள்ளது.
நேற்று காலை 10.30 மணியளவில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
மே 4ஆம் தேதியுடன் சித்திரைத் திருவிழா நிறைவுபெறும். மறுநாள் சித்திரை பௌர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
திருவிழாவையொட்டி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் மதுரையில் குவிந்துள்ளனர்.

