இந்தியா முழுவதும் நூறு மாவட்டங்களில் நூறு உணவுத் தெருக்கள் அமைக்க திட்டம்

இந்தியா முழுவதும் நூறு மாவட்டங்களில் நூறு உணவுத் தெருக்கள் அமைக்க திட்டம்

1 mins read

சென்னை: நாட்டு மக்­கள் உடல்­நலத்­து­டன் இருக்க அனை­வ­ருக்­கும் சுகா­தா­ர­மான உண­வுகளும் உணவுப் ­பொ­ருள்களும் எளி­தில் கிடைக்­கச் செய்ய வேண்­டும் என மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதை சாத்­தி­யப்­ப­டுத்த ஏது­வாக நாடு முழு­வ­தும் 100 மாவட்­டங்­களில் 100 உணவுத் தெருக்­களை தொடங்க நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும் என அந்த அமைச்சு அனைத்து மாநி­லங்­க­ளுக்­கும் கடி­தம் அனுப்­பி­யுள்­ளது.

இத்­திட்­டம் சோதனை அடிப்­படை­யில் செயல்­ப­டுத்­தப்­படும் என்­றும் பின்­னர் படிப்­ப­டி­யாக விரிவு­ப­டுத்­தப்­படும் என்­றும் சுகா­தார அமைச்சு அனுப்­பிய கடி­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பல்­வேறு மாநி­லங்­களில் இருக்­கும் சுவை­யான உணவு வகை­கள் பிற மாநி­லங்­க­ளி­லும் கிடைப்­பதற்கு உண­வுத் தெருக்­கள் உத­வும் என்­றும் வேலை வாய்ப்­பு­கள் அதி­க­ரிக்­கும் என்றும் மத்­திய அரசு வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

நாட்டு மக்­கள் மத்­தி­யில் பாது­காப்­பான, நல்ல உண­வுப் பழக்­கங்­களை ஊக்­கு­விப்­பதே இந்த திட்­டத்­தின் நோக்­கம் என்­றும் இதன்வழி உண­வுப்­பொ­ருள் மூலம் பர­வும் நோய்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யும் என்­றும் அக்­கடி­தம் தெரி­விக்­கிறது.

"இந்­தத் திட்­டம் உள்­ளூர் வேலை­வாய்ப்­பு­களை அதி­க­ரிப்­பதுடன் சுற்­றுலா, பொரு­ளி­யல் வளர்ச்­சி­யி­லும் பங்கு வகிக்­கும். இதற்­குத் தேவை­யான தொழில்­நுட்ப உத­வியை இந்­திய உணவு பாது­காப்பு, தர ஆணை­யம் வழங்­கும்.

"இதற்­கான நிதி­யு­த­வி­யாக ஒரு உணவுத் தெரு­வுக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் மாநில அரசு­க­ளுக்கு மத்­திய அரசு வழங்­கும்," என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.