19,000 கைப்பேசி எண்கள் நிரந்தரமாக முடக்கம்

1 mins read

சென்னை: மோசடிச் செயல்­களை அரங்­கேற்ற பயன்­ப­டுத்­தப்­பட்ட 19,000 கைப்­பேசி எண்­க­ளை நிரந்தரமாக முடக்கிவிட்டது தமி­ழகக் காவல்­து­றை­யின் இணை­யக் குற்றத்­த­டுப்­புப் பிரிவு.

மோசடி அழைப்­பு­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் தொலை­பேசி எண்­கள் அனைத்­துமே நிரந்­த­ர­மாக முடக்­கப்­படும் என அப்­பி­ரி­வின் ஏடி­ஜிபி சஞ்­சய் குமார் தெரி­வித்­துள்­ளார்.

இணை­யக் குற்­றங்­க­ளின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது. பல்­வேறு நூதன முறை­க­ளைப் பயன்­ப­டுத்தி அக்­குற்­றச் செயல்­கள் அரங்கேற்றப்­ப­டு­கின்­றன.

பெரும்­பா­லும் வாடிக்­கை­யா­ளரை அறிந்­து­கொள்­ளும் நடைமுறைக்­கான கோரிக்­கை­கள், ஆதார் எண், நிரந்­தர வரு­மான வரிக் கணக்கு எண்­, கைப்­பேசி எண்­ ஆகி­ய­வற்றை வைத்து மோசடி செய்­கி­றார்­கள்.

"இப்­போது மத்­திய ​​உள்­துறை அமைச்சு மூலம் இணை­யக் குற்­றத்­த­டுப்பு, ஒருங்­கி­ணைப்பு மையம் தீவி­ர­மா­கச் செயல்­பட்டு வரு­கிறது. குற்­றச் செயல்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் கைப்­பே­சி எண்­களை நிரந்­த­ர­மாக தடை செய்­வ­தற்­கான கோரிக்­கையை முன்­வைக்க இணை­யத்­த­ளம் ஒன்­றும் தொடங்­கப்­பட்­டுள்­ளது," என்­றார் திரு சஞ்­சய் குமார்.