திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் இன்று தொடங்கி இரண்டு நாள்கள் பயணம் மேற்கொள்ளும் நிலையில், அவருக்கு எதிராக மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அம்மாநில பாஜக தலைவா் கே.சுரேந்திரனின் அலுவலகத்துக்கு கடந்த வாரம் மலையாள மொழியில் எழுதப்பட்ட அம்மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
கொச்சியைச் சோ்ந்த என்.ஜெ.ஜானி என்பவரின் பெயரில் அக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் காவல்துறை கூறுகிறது.
அவருடைய கையொப்பம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. பிரதமருக்கு தாம் மிரட்டல் கடிதம் அனுப்பவில்லை என்றும் தம்மைப் பழிவாங்கும் நோக்கில் யாரேனும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்றும் ஜானி தெரிவித்துள்ளார்.
உளவுப் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

