திருஞானசம்பந்தர் பாடல் பொறிக்கப்பட்ட தங்க ஏடு கண்டுபிடிப்பு

1 mins read
dc887278-fd74-4e70-ae99-ff893eed41b0
-

மதுரை: நான்கு முக்­கிய நாயன்­மார்­களில் ஒரு­வ­ரான திரு­ஞா­ன­சம்­பந்­த­ரின் தேவா­ரப் பாடல் அச்­சி­டப்­பட்ட தங்­கச் சுவடி மது­ரை­யில் உள்ள கோவி­லில் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் முதல்­மு­றை­யாக திரு­ஞான சம்­பந்­தர் பாடல் பதிந்த தங்க ஏடு இது என்­கி­றார்­கள் ஆய்­வா­ளர்­கள்.

தமி­ழ­கக் கோவில்­களில் ஆய்வு மேற்­கொள்­வ­தற்கு என அரசு சார்­பாக குழு ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், மதுரை மாவட்­டம் திரு­வே­ட­கத்­தில் பழமை வாய்ந்த சிவத்­த­லங்­களில் ஒன்­றான ஏட­க­நா­தர் கோவி­லில் இக்­கு­ழு­வி­னர் சுவ­டி­கள் இருப்பு குறித்து ஆய்வு மேற்­கொண்­ட­னர். அப்­போது தங்க ஏடு கண்­டெ­டுக்­கப்­பட்­டது. மேலும், கோவி­லின் வரவு, செலவு கணக்கு அடங்­கிய ஓலைச்­சு­வ­டிக்­கட்­டும் காணப்­பட்­டது.

தமி­ழ­கத்­தில் பக்தி இலக்­கி­யப் பாடல் பதிக்­கப்­பட்ட தங்க ஏடு கிடைப்­பது இதுவே முதல்­முறை என கூறப்­ப­டு­கிறது.

தமி­ழ­கம் முழு­வ­தும் இந்து சமய அற­நி­லை­யத் துறைக்கு உட்­பட்ட 45 ஆயி­ரத்­துக்­கும் மேலான கோவில்­களில் ஓலைச்­சு­வ­டி­கள், செப்­புப் பட்­ட­யங்­கள் குறித்து கள ஆய்வு செய்து வருவதாகக் கோவில் ஓலைச் சுவ­டி­கள் பாது­காப்பு பரா­ம­ரிப்பு நூலாக்­கத் திட்­டத்­தின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரும் உல­கத் தமி­ழா­ராய்ச்சி நிறு­வ­னத்­தின் சுவ­டித்­துறை பேரா­சி­ரி­ய­ரு­மான சு.தாம­ரைப்­பாண்­டி­யன் தெரி­வித்­துள்­ளார்.

"கோவில் தல புராணப்படி திருஞானசம்பந்தர் 'வாழ்க அந்தணர்' எனும் பதிகம் எழுதி, வைகை நதியிலிட்டதன் நினைவாக அப்பாடலைத் தங்க ஏட்டில் எழுதி பாதுகாத்து வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.

"எழு­தப்­பட்ட காலம் பற்­றிய குறிப்­பு­கள் ஏதும் இல்லை. எங்­க­ளு­டைய ஆய்வு நீடித்து வரு­கிறது," என்­றும் தாம­ரைப் பாண்­டி­யன் செய்­தி­யா­ளர்­களிடம் தெரிவித்தார்.