திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதையடுத்து கொடைக்கானல் நகர் நுழைவுவாயில் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகே பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
சுழற்சி முறையில் இப்பரிசோதனை நடத்தப்படுவதாகவும் இது தொற்றுப்பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோடை காலம் என்பதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட குளிர் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அப்பகுதிகளில் தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன.
சுற்றுலாப் பயணிகள் இரு தவணை தடுப்பூசிகள் போட்டுக்கொண்டுள்ளனரா என சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
பயணிகளிடம் சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

