வேலை நிறுத்தப் போராட்டம்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

வேலை நிறுத்தப் போராட்டம்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

2 mins read

12 மணி நேர வேலை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு

சென்னை: 12 மணி நேர வேலை மசோதா தொடர்­பாக தமி­ழக அரசு தொழிற்­சங்­கங்­க­ளு­டன் ஆலோ­சனை நடத்­த­வில்லை என அச்­சங்­கங்­கள் குற்­றம்­சாட்டி உள்­ளன.

புதிய மசோ­தா­வுக்கு எதிர்ப்பு தெரி­வித்து, எதிர்­வ­ரும் மே 12ஆம் தேதி மாநி­லம் தழு­விய அள­வில் வேலை நிறுத்­தப் போராட்­டம் நடத்­தப்­படும் என அனைத்து தொழிற்­சங்கங்களின் ஆலோ­ச­னைக் கூட்­டத்­துக்­குப் பின்­னர் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் நாளை முதல் மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­களில் தொடர் போராட்­டங்­கள் நடத்­தப்­படும் என்று தொழிற்­சங்க நிர்­வா­கி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில் அண்­மை­யில் 12 மணி நேர வேலை மசோதா நிறை­வேற்­றப்­பட்­டது. எதிர்க்­கட்­சி­களும் தொழிற்­ சங்­கங்­களும் புதிய மசோ­தா­வுக்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்­தன. இந்­நி­லை­யில் ஒன்­பது தொழிற்­சங்­கங்­க­ளைச் சேர்ந்த நிர்­வா­கி­கள் சென்­னை­யில் ஆலோ­சனை மேற்­கொண்­ட­னர். அதில் முக்­கி­யத் தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.

பல்­வேறு நாடு­களில் ஐந்து நாள்­கள் வேலை, நாளொன்­றுக்கு ஏழு மணி நேரம் வேலை என்று வேலை நேரத்­தைக் குறைத்து வரும் நிலை­யில், முதல்­மு­றை­யாக வேலை நேரத்தை அதி­க­ரித்து மசோதா நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தாக ஒரு தீர்­மா­னத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஏற்­கெ­னவே இது­போன்ற சட்டத்­தி­ருத்­தத்தை மத்­திய அரசு கொண்டு வந்­த­போது, அனைத்து தொழிற்­சங்­கங்­களும் எதிர்ப்பு தெரி­வித்­தன என்­றும் மத்­திய அர­சால் இது­வரை செயல்­ப­டுத்த முடி­யாத சட்­டத்தை, தமி­ழக அரசு செயல்­ப­டுத்த முனை­வது கண்­ட­னத்­துக்­கு­ரி­யது என்­றும் மற்­றொரு தீர்­மா­னம் தெரி­விக்­கிறது.

"மசோதா தொடர்­பாகப் பேரம் பேசி உடன்­பாட்­டுக்கு வரு­வது எந்த வகை­யி­லும் சாத்­தி­ய­மா­ன­தல்ல. எனவே, தமி­ழக அரசு இந்த மசோ­தா­வைக் கைவிட வேண்­டும்.

"புதிய மசோ­தா­வுக்கு எதிர்ப்பு தெரி­வித்து வாக­னப் பிர­சா­ரம், மறி­யல், வேலை நிறுத்­தம் எனப் பல்­வேறு போராட்­டங்­கள் நடை­பெ­றும்," என்று சென்­னை­யில் நடை­பெற்ற கூட்­டத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இதனிடையே, 12 மணி நேர வேலை சட்டம் தமிழக தொழிலாளர்களுக்கு உதவியாக இருக்கும் என தமிழக வணிகர் சங்க கூட்டமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

காலம் மாறி வருவதால் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்­நி­லை­யில், சட்­டப்­பே­ர­வை­யில் நிறை­வேற்­றப்­பட்ட 12 மணி நேர வேலை மசோதா சட்­டப்­பே­ரவை செய­ல­கத்­தில் இருந்து சட்­டத்­து­றைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.