கண்ணியமான விசாரணை: காவலர்களுக்குப் பயிற்சி

கண்ணியமான விசாரணை: காவலர்களுக்குப் பயிற்சி

1 mins read

சென்னை: காவல் நிலை­யங்­களில் புகார் அளிக்க வரு­ப­வர்­களை கண்­ணி­ய­மாக விசா­ரித்து, புகா­ரின் தன்­மைக்­கேற்ப உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்வது தொடர்­பாக தமி­ழகக் காவல்­து­றை­யி­ன­ருக்குப் பயிற்சி அளிக்­கப்­ப­டு­கிறது.

எத்­த­கைய வழக்­காக இருந்­தா­லும் காவல்­து­றை­யி­னர் கண்­ணி­ய­மான முறை­யில் விசாரணை மேற்­கொள்ள வேண்­டும் என தமிழகக் காவல்­துறை தலைவர் டிஜிபி சைலேந்­திர பாபு அறிவுறுத்தி உள்­ளார்.

இதற்­காகக் காவல் ஆய்­வா­ளர்­கள், துணைக் கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளுக்குச் சிறப்­புப் பயிற்சி முகாம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. நாள்­தோ­றும் அதி­க­பட்­ச­மாக நூறு அதி­கா­ரி­க­ளுக்கு இப்­ப­யிற்சி அளிக்­கப்­ப­டு­கிறது.

டிஜிபியும் இந்­தப் பயிற்சி முகா­மில் கலந்து கொண்டு அதி­கா­ரி­க­ளுக்கு உரிய ஆலோ­ச­னை­களை வழங்கி வரு­கி­றார்.

விசா­ரணை என்ற பெய­ரில் காவல்­து­றை­யி­னர் மோச­மாக நடந்­து­கொள்­வ­தா­கப் புகார்­கள் எழுந்­துள்­ளன. அண்­மை­யில் நெல்­லை­யில் காவல் துணைக் கண்­கா­ணிப்­பா­ளர் ஒரு­வர் விசா­ரணை என்ற பெய­ரில் பலரைக் காவல் நிலை­யங்­க­ளுக்கு அழைத்­துச் சென்று பற்­க­ளைப் பிடுங்கி சித்­ர­வதை செய்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து அவர் பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே காவல்­துறை அதி­கா­ரி­கள் அனைத்து நட­வடிக்­கை­க­ளை­யும் துரித கதி­யில் மேற்­கொள்ள வச­தி­யாக புதி­தாக சிறப்­புச் செயலி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் அதி­கா­ரி­கள் அடுத்­த­டுத்த உத்­த­ர­வு­களை உட­னுக்­கு­டன் பிறப்­பிக்க இய­லும் எனக் கூறப்­ப­டு­கிறது.

காவல்­து­றை­யில் நிர்­வாக ரீதி­யி­லான பெரும்­பா­லான பணி­கள் கணி­னி­ம­ய­மாக்­கப்­பட்­டுள்­ளன. அடுத்த கட்­ட­மாக அதி­கா­ரி­க­ளுக்கு என தனிச்­செ­யலி அறி­மு­க­மாக உள்­ளது.