ஒரேநாளில் இரண்டு முறை முடிவை மாற்றிய அரசாங்கம்

ஒரேநாளில் இரண்டு முறை முடிவை மாற்றிய அரசாங்கம்

2 mins read

கடும் எதிர்ப்பால் 12 மணி நேர வேலை, மதுபான விற்பனை முடிவுகளில் பின்வாங்கியது

சென்னை: தமிழ்­நாட்டை ஆளும் திமுக அர­சாங்­கம் திங்­கட்­கி­ழமை ஒரே நாளில் தன்­னு­டைய இரண்டு கொள்கை முடி­வு­களில் இருந்து பின்வாங்கிவிட்­டது.

பல தரப்­பு­களும் குறிப்­பாக எதிர்த்­த­ரப்­பி­னர் கடு­மை­யான எதிர்ப்பை வெளிப்­படுத்­தி­யதே அதற்­கான கார­ணம்.

தொழிற்­சாலை (திருத்­தம்) சட்­டம் 2023 என்ற ஒரு சட்ட வரைவை அர­சாங்­கம் நிறுத்­தி­வைத்­து­விட்­டது. சில வகை ஊழி­யர்­கள் 12 மணி நேரம் வேலை பார்க்க அந்­தச் சட்ட வரைவு வகை செய்­கிறது.

அதன்­படி, குறிப்­பிட்ட நிறு­வ­னங்­கள் தங்­க­ளு­டைய ஊழி­யர்­கள் ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை செய்ய அனு­ம­திக்­க­லாம். வாரத்­தில் ஊழி­யர்­கள் மொத்­தம் 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்­டும் என்று அந்த உத்தேச சட்டம் தெரி­வித்­தது.

இப்­படி வேலை நேரத்தை மாற்­றி­னால் அர­சாங்­கம் அதிக முத­லீ­டு­களை ஈர்க்க முடி­யும். இத­னால் மின்­னணு, தோல் சாராத காலணி தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளுக்­குப் பெரும் ஊக்­கம் கிடைக்­கும் என்று அர­சாங்­கம் விளக்கம் அளித்தது.

ஆனால், திமுக கூட்­ட­ணி­யில் இடம்­பெற்­றி­ருக்­கும் அர­சி­யல் கட்­சி­களும் தொழிற்­சங்­கங்­களும் மற்ற தரப்­பு­களும் அந்த ஏற்­பாட்டை கடு­மை­யாக எதிர்த்­தன. அத­னால் ஊழி­யர்­க­ளின் உரிமை பறி­போ­கும் என்று அவை வாதிட்­டன.

அர­சாங்­கம் பல தரப்­பு­க­ளு­டன் விவா­திப்பு கூட்­டம் நடத்­தி­யது. அத­னை­ய­டுத்து 12 மணி நேர வேலை முடிவு தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­பட்டு இருப்­ப­தாக அர­சாங்­கம் அறி­வித்­தது.

இதே­போல, மற்­றொரு கொள்கை­யி­லும் தமி­ழக அரசு பல்டி அடித்­தது. மாநா­டு­கள், திரு­ம­ணங்­கள், விளை­யாட்டு அரங்கு­கள், குடும்ப கொண்­டாட்ட நிகழ்ச்­சி­கள் உள்­ளிட்ட பல­வற்­றி­லும் சிறப்பு உரி­மம் பெற்று மது­பா­னத்தைப் பரிமாறலாம் என்று அர­சாங்­கம் அண்­மை­யில் முடி­வெ­டுத்­தது.

அத்­த­கைய சிறப்பு உரி­மம் ஏற்­பா­டு­கள் கர்­நா­டகா, மகா­ராஷ்­டிரா, பஞ்­சாப் போன்ற மாநி­லங்­க­ளி­லும் புது­டெல்­லி­யி­லும் நடப்­பில் இருப்­பதை தமி­ழக அரசு சுட்­டியது.

ஆனால், எதிர்த்­த­ரப்­பு­கள் கடு­மை­யாக எதிர்த்­தன. அத்­த­கைய ஓர் ஏற்­பாடு சமூக ஒழுங்­கையே சீர்­கு­லைத்­து­வி­டும். ஏற்­கெ­னவே பல பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கும் சட்ட ஒழுங்கு மேலும் சீர்­கெட்­டு­­வி­டும் என்று எதிர்த்­த­ரப்­பு­கள் கடு­மை­யா­கக் குறை­கூ­றின.

இதை­ய­டுத்து தமி­ழக அரசு கொண்­டாட்­டம், விழாக்­களில் சிறப்பு மது­பான உரி­மத்­திற்கு அனு­மதி இல்லை என்று முடிவு செய்­தது.

வணிக வளா­க மாநாட்டு மையங்­கள், கூட்ட அரங்கு­களில் நடக்கும் தேசிய நிகழ்ச்­சி­கள், பன்­னாட்டு நிகழ்ச்­சி­கள், உச்­ச­நிலை மாநா­டு­கள், அனைத்­து­லக தேசிய விளை­யாட்டு நிகழ்ச்சிகள் நடக்கும் விளை­யாட்டுத் திடல்­கள், விளை­யாட்டு அரங்­கு­களில் அந்த நிகழ்­வு­கள் நடை­பெ­றும்­போது மட்­டும் மது­பா­னம் பரி­மாறு­வ­தற்­கான தற்­கா­லிக உரி­மம் வழங்­கப்­படும் என்று திருத்­தப்­பட்ட அறிக்­கையை தமி­ழக அரசு வெளி­யிட்­டுள்ளது.